tamilnadu

மதுரையில் கூடுகிறது தொழிலாளர் வர்க்கத்தின் தலைமை!

"பிற்போக்குச் சக்திகளை முறியடிக்க இன்றே
         பெருங்கடலாம் தொழிலாளர் புரட்சிஎனும் புயலைத்
தற்போதே எழுப்பிடுக! தவறிவிட வேண்டாம். 
          தரைமீதில் சுமையாக உள்ள முதலாளி
கற்பாறையென்றே நீர் கருதற்க! உமது
          கை ஓங்கிக் கொடுக்கின்ற அறைபட்டு பொடியாய்ப் 
 புற்பனிபோல் பொலபொலென உதிர்ந்திடுவான்; இன்றே
           புறப்படுவீர்! நானுங்கள் புகழ்பாடுகின்றேன்."
என்ற கவிஞர் தமிழ்ஒளி அறைகூவலுக்கு இணங்க கோடி கோடியாக தொழிலாளர் வர்க்கமென மதுரையில் திரள்கின்றனர் உழைக்கும் மக்கள். 
மதுரையில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24ஆவது அகில இந்திய மாநாடு மக்களின் வாழ்வாதாரப் போராட்டத்திற்கு தீர்வுகளை ஆராயும்.‌ சமத்துவமான இந்தியாவை கட்டமைக்க ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்களை வகுக்கும். 
செக்கர் என ஒளி
சிந்திப் பறந்தது
சேரியில் செங்கொடியே - திகை
திக்குகள் அன்று
சிரித்தன, கூடின
சேர்ந்தன கைகளையே!

சுக்கிரன் சேரி
உழவரெலாம் இனிச்
சோதரர் ஆகிவிட்டார் - கனல்
கக்கிடும் கண்களைக்
காட்டிய மேலோர்
கண்டு நடுங்கிவிட்டார்!

சங்க மெழுந்தது 
சாகரம் போலவே
சத்திய போதனையில் - ஜெய
சங்க மெழுந்தது
மேள மொலித்தது
ஜாதி நடுங்கிடவே! 
என்ற கவிஞர் தமிழ்ஒளி கவிதைக்கு உயிர் தரும் வகையில் மதுரை சிவக்கிறது.
ஓங்கட்டும் தொழிலாளர் வர்க்க ஒற்றுமை!
வலுக்கட்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)!
வெல்லட்டும் 24ஆவது ‌அகில இந்திய மாநாடு!

தோழமையில் இணைந்து
பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு