economics

img

ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைப்பு!

ரெப்போ வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் (0.25%) குறைந்து 6.25% இருந்து 6%-ஆக குறைத்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளாக வங்கிகளின் குறுகியகால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படாமல் 6.5% என்ற அளவில் இருந்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரியில் 0.25% குறைந்தது 6.25% ஆக இருந்தது. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கிய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு ஆலோசனை கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார்.
அதன்படி, 6.25% இருந்த ரெப்போ வட்டி விகிதம் 6%-ஆக குறைத்துள்ளது. மேலும், 2025-26 ஆம் நிதியாண்டுக்கான உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5% ஆக இருக்கும் என்றும், நுகர்வோர் விலைக் குறியீட்டு (CPI) பணவீக்கம் 4% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.