இந்தியாவில் ஏப்ரல் மாதத்திற்கான ஜி.எஸ்.டி வரி வசூல் 12.6% அதிகரித்து ரூ.2.37 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ.2.10 லட்சம் கோடியாக இருந்தது. நடப்பாண்டு மார்ச் மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ.1.96 லட்சம் கோடியாக இருந்தது. இந்த நிலையில், ஏப்ரல் மாதத்திற்கான ஜி.எஸ்.டி வரி வசூல் 12.6% அதிகரித்து ரூ.2.37 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் ஜி.எஸ்.டி அமல்படுத்தியதில் இருந்து தற்போது வரை, அதிகபட்சமாக ஜி.எஸ்.டி வசூலிக்கப்பட்டிருந்து கடந்த ஏப்ரல் மாதத்தில்தான்.
அதே போல், உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலம் வசூலிக்கப்பட்ட ஜி.எஸ்.டி வருவாய் 10.7% அதிகரித்து ரூ.1.9 லட்சம் கோடியாகவும், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து வசூலிக்கப்பட்ட ஜி.எஸ்.டி வருவாய் 20.8% அதிகரித்து ரூ.46,913 கோடியாகவும் உயர்ந்துள்ளது.