புதுதில்லி,மே.01- அரிசிக்கு 20% ஏற்றுமதி வரி விதித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது
புவிசார் குறியீடு பெற்ற புழுங்கல் அரிசி, புவிசார் குறியீடு பெறாத புழுங்கல் அரிசி என அனைத்து வகை புழுங்கள் அரிசி மற்றும் உமி நீக்கப்பட்ட அரிசி வகைகளுக்கு 20% ஏற்றுமதி வரி விதித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
தேவைக்கேற்ப அரிசி இருப்பு மற்றும் விநியோகத்தை உறுதி செய்யவும், உள்நாட்டில் உணவு இருப்பை உறுதி செய்யவும், - கள்ளச்சந்தையில் அரிசி விற்பனை, அரிசி பதுக்கல் ஆகியவற்றை தடுக்கவும் இந்த வரி விதிக்கப்பட்டிருப்பதாக ஒன்றிய நிதித்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் 20% வரி விதிப்பு இன்று முதல் அமலுக்கு வரும் எனவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது