மதுரையில் சர்வதேச ஹாக்கி மைதானம் தரமாக உள்ளது
இந்திய அணியின் பயிற்சியாளர் ஸ்ரீஜேஷ், கேப்டன் ரோகித் பெருமிதம்
திங்களன்று மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்திய இளையோர் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் ஸ்ரீஜேஷ், கேப்டன் ரோகித் ஆகி யோர் பேசுகையில், “சர்வதேச ஹாக்கி போட்டிகளில் தற்போது லீக் போட்டிகள் முடியும் நிலையில் உள்ளது. அப்போட்டிகள் முடிந்தவுடன் இந்தியா அணி யாருடன் விளையாடும் என்று தெரியவரும். அதற்கேற்றவாறு இந்திய அணியை தயார் செய்து கொள் வோம். இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் இல்லை. இது சற்று சோகமான விஷயம் தான். செவ்வாயன்று மதுரையில் நடை பெறும் போட்டியில் சொந்த பாணியில், திட்டமிட்ட வேகத்தில் விளையாடு வோம். நாங்கள் காலிறுதிக்குத் தயாரா கும்போது, ஒரு உயர்ந்த அணுகுமுறை யுடன் செல்ல வேண்டும். அதற்காக நாங்கள் இன்னும் அதிக கோல்களை அடிக்க பயிற்சி செய்து வருகிறோம். காலிறுதி, அரையிறுதி அல்லது இறுதிப் போட்டிகளில் தற்காப்பில் மட்டுமல்ல, தாக்குதலிலும் இன்னும் கூர்மையாக இருப்போம் என்று நம்புகிறோம். மதுரையில் சர்வதேச ஹாக்கி மைதானம் தரமாக உள்ளது. சர்வதேச ஹாக்கி சம்மேளனம் விதிகளின்படி இருந்தால்தான் மைதானத்திற்கு சான்றிதழ் கிடைக்கும். அதன் பிறகு தான் சர்வதேச போட்டிகளை இங்கு நடத்த முடியும். எனவே மதுரை மைதா னம் சர்வதேச தரத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் 15 புதிய மைதானங்கள் மதுரை ரசிகர்கள் சர்வதேச ஹாக்கி போட்டியை முதல்முறையாக பார்க்கின்றனர். இந்திய அணியிட மிருந்து தரமான ஆட்டத்தை எதிர்பார்ப் பார்கள். மதுரையில் நிறைய ஹாக்கி வீரர்கள், ரசிகர்கள் உள்ளனர். அவர் களுக்கு இந்த உலகக்கோப்பை ஒரு அற்புதமான வாய்ப்பு. இப்போட்டிகள் மூலம் இளம் தலைமுறையினர் உத்வேகம் பெறுவார்கள். மதுரை, கோவில்பட்டி பகுதிகளில் நிறைய திறமையான இளைஞர்கள் உள்ள னர். இது நாட்டிற்கு ஒரு பெரிய வளர்ச்சி யாக இருக்கும் என்று நம்புகிறேன். தற் போதுதான் தமிழகத்தில் பள்ளி, கல்லூரி அளவில் ஹாக்கி வீரர்களை உருவாக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் 2 ஆண்டுகளில் தமிழகத்தி லிருந்து பல வீரர்கள் உருவாகி இந்திய அணியில் இடம்பெறுவார்கள். பள்ளி அளவில் லீக் போட்டியை நடத்த வுள்ளார்கள். அதன்பிறகு இளம் வீரர் களை உருவாக்க தமிழகத்தில் 15 புதிய ஹாக்கி மைதானம் அமைக்கப் படவுள்ளது. அதற்கான கட்டமைப்பு களை தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது. இந்திய அணியில் தமிழக வீரர்கள் பங்கேற்கச் செய்ய பயிற்சி நடந்து வரு கிறது. பள்ளிகளில் பல்வேறு போட்டி கள் நடத்தி வருகிறோம். மேலும் கோடைகால பயிற்சி வகுப்புகளும் தொடங்கியுள்ளோம். இதுஒரு திட்டம். இதன் மூலம் 2 ஆண்டுகளில் நிறைய பேர் வருவார்கள். தமிழகத்தில் ஹாக்கி போட்டிகளில் தமிழக முதல் வரின் ஆதரவு சிறப்பாக உள்ளது. துணை முதல்வரும் சிறப்பாக வழி நடத்தி வருகிறார். இந்தியாவின் பஞ்சாப், ஒடிசா, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் வீரர்கள் நிறைய பேர் உள்ளனர். பஞ்சாப் அரசு ஹாக்கி விளையாட்டை முக்கியத்துவம் கொடுத்து ஊக்குவிக்கின்றனர். தற்போது அந்த பணியை தமிழக அரசு செய்துவருகிறது. இந்திய அணியில் திறமையான கோல் கீப்பர்கள் நிறைய பேர் உள்ளனர். பயிற்சி மற்றும் இதர போட்டிகள் ஜனவரி மாதத்திலிருந்து தொடங்குகிறது. மதுரையில் வெளிநாட்டு வீரர் களுக்காக ஒரு சிறப்பு ஜல்லிக்கட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் போட்டி முடிந்தவுடன் காலிறுதிக்குத் தயாராக நாங்கள் சென்னை செல் கிறோம். ஜல்லிக்கட்டு மூலம் நமது கலாச்சாரம், பாரம்பரியத்தை வெளி நாட்டினருக்கு தெரியப்படுத்தவேண் டும். அதன்மூலம் நமது கலாச்சாரத்தை பற்றி பெருமையுடன் தெரிந்து கொள்வார்கள். சென்னையிலும் எங்க ளுக்கு நிறைய ஆதரவு கொடுத்தார்கள். அங்கு சூழ்நிலை நன்றாக இருந்தது, நாங்கள் மகிழ்ந்தோம். மதுரை மக்க ளின் ஆதரவை இன்று பார்ப்போம். இளையோர் அணியிலிருந்து இந்திய ஹாக்கி அணிக்கு 8 வீரர்கள் செல்வார்கள்” இவ்வாறு அவர்கள் கூறினர்.
