tamilnadu

கியூபாவிற்கு எதிரான அமெரிக்க மிரட்டல்களை சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும்!

கியூபாவிற்கு எதிரான அமெரிக்க மிரட்டல்களை சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும்!

புதுதில்லி, பிப். 3 - கியூபாவிற்கு எதிரான அமெரிக்காவின் மிரட்டல்களை, ஆக்கிரமிப்புகளை, இந்தியா உட்பட சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டும்; இந்திய மக்களும் கியூபாவின்  இறை  யாண்மைக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுத்துள்ளன. கியூபாவிற்கு எதிரான அமெரிக்காவின் மிரட்டல் நடவடிக்கைகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் து. ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்-எல்)  லிபரேசன் பொதுச்செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச்செயலாளர் ஜி. தேவராஜன், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா ஆகிய இடதுசாரி கட்சித் தலைவர்கள் கூட்டாக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.  அதில் கூறப்பட்டிருப்பதாவது: ஐ.நா. சாசனங்களை மீறும் அமெரிக்கா! சோசலிச கியூப நாட்டிற்கு எதிராக அமெரிக்கா தொடுத்துள்ள மிரட்டல் நடவடிக்கை கள் கண்டனத்திற்கு உரியன. அந்நாட்டிற்கு வந்து இறங்க வேண்டிய எண்ணெய்க் கப்பலை அமெரிக்கா தடுத்து நிறுத்திய செயல் கண்டிக்கத்தக்கது. இந்த நடவடிக்கை ஐக்கிய நாடுகள் சபை வகுத்துள்ள சாசனத்திற்கும், சர்வதேச சட்டவிதிமுறைகளுக்கும் எதிரானதாகும். சமீபத்தில் வெனிசுலா நாட்டைத் தாக்கி, ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவையும், அவரது இணையர் சிலியா ஃபுளோரஸையும் அமெரிக்க ராணுவம் கடத்திச் சென்றது. இப்பொ ழுது கியூபாவிற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கியூபாவிற்கு கச்சா  எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா அந்நாடுகளை மிரட்டி யுள்ளது. 67 ஆண்டுகளாக தொடரும் சீர்குலைவு சதித் திட்டங்கள் கியூப பொருளாதாரத்தை திணறடிப்பதன் மூலம் அந்நாட்டை நிலைகுலையச் செய்ய முடியும் என்று அமெரிக்கா நம்புகிறது. இப்படிப்பட்ட நடவடிக்கைகளை, கடந்த 67 வருடங்களாக வெளிப்படையான தீவிரவாத தாக்குதல், பொருளாதாரத் தடை, தோழர் பிடல் காஸ்ட்ரோவை கொலை செய்வதற்கான முயற்சிகள் என பல்வேறு வழிகளில் கியூபாவின் ஸ்திரத்தன்மையை குலைப்பதற்கு அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது.  ஆனால், இந்த முயற்சிகளெல்லாம் தோல்வியையே கண்டன.  அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்,  தேசியப் பாதுகாப்புத் திட்டம் 2025-ஐ  அறிவித்திருப்பது என்பது சோசலிச கியூபாவை நிலை தடுமாறச் செய்யும் இலக்கை நோக்கிய மற்றொரு புதிய நடவடிக்கையாகும். அமெரிக்கா தொடுத்த தாக்குதல்கள் அனைத்தையும் கியூப மக்கள் கடந்த காலத்தில் முறியடித்தது போலவே இப்போது  எடுக்கப்பட்டுள்ள தீவிர தாக்குதல் நடவடிக்கை களையும் முறியடிப்பார்கள்.  சர்வதேச ஒருமைப்பாட்டிற்கு பணியாற்றும் கியூபா! சர்வதேச ஒருமைப்பாட்டிற்காக எப்பொழு தும் தன்னை முன்னிறுத்தும் மிகச்சிறந்த தேசமாக கியூபா விளங்குகிறது. அதுமட்டு மல்ல எந்தெந்த நாடுகளுக்கெல்லாம் மருத்துவ உதவிகள் தேவைப்படுகின்றனவோ அங்கெல்லாம் தனது நாட்டின் மருத்துவர் களையும் சுகாதாரத்துறை வல்லுநர்களையும் அனுப்பி வைத்து மிகச்சிறந்த சேவை ஆற்றி வருகிறது.  குறிப்பாக, உலகத்தின் தென் பகுதியிலுள்ள பல்வேறு நாடுகளுக்கு கியூபா தனது மருத்துவ நிபுணர்களையும் மருந்துப் பொருட்களையும் தேவை ஏற்படும்போதெல்லாம் உடனுக்குடன் அனுப்பி வைத்துள்ளது. எனவே, இப்படிப்பட்ட உன்னதமான கியூப நாட்டின் மீது தாக்குதல் தொடுப்பது என்பது மனிதநேயத்தின் - மனிதாபிமானத்தின் மீதே தாக்குதல் தொடுப்பதாகும். இந்திய மக்களும் ஆதரவுக் குரலெழுப்ப வேண்டும்! கியூபாவிற்கு எதிரான அமெரிக்காவின் இத்தகைய மிரட்டல்களை இந்திய அரசு கண்டிப்பதோடு அந்நாட்டோடு தமது ஒருமைப்பாட்டையும் தெரிவிக்க வேண்டும். சர்வதேச சமூகம் அமெரிக்காவின் இந்த ஆக்கிரமிப்பிற்கு எதிராக நிற்பது அவசியம். கியூப நாட்டோடு தனது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவது மிக மிக அவசியம். கியூபாவின் இறையாண்மை உரிமை களை பாதுகாக்க நம் நாட்டு மக்கள் அணிதிரள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறது.