இது நடந்தால்தான் இந்தியாவிற்கு 2 புள்ளிகள் கிடைக்கும்
வங்கதேசத்திற்கு ஆதர வான நிலைப்பாடு என்ற பெயரில் பிப்., 7 அன்று தொடங்கும் ஆடவர் டி-20 உலகக்கோப்பை (இந்தியா, இலங்கையில் கூட்டாக நடைபெறுகிறது) தொடரில் இந்தி யாவிற்கு எதிரான லீக் ஆட்டத்தை (பிப்., 15) மட்டும் பாகிஸ்தான் அணி புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இது உலகளவில் சர்ச்சை மற்றும் விவாதப் பொருளாக உருவெடுத்துள் ளது. பாகிஸ்தானின் இந்த முடிவுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) தீவிர நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் அணி போட்டியை புறக்கணிப்பதாக அறிவித்ததால் இந்திய அணிக்கு லீக் போட்டிகளில் 2 புள்ளிகள் கிடைப்பது உறுதியாகி விட்டது. ஆனால் இந்திய அணி இதை யெல்லாம் மேற்கொண்டால் மட்டுமே 2 புள்ளிகள் கிடைக்கும்: 1.பாகிஸ்தான் அணி விளையாட வில்லை என்றாலும், இந்திய அணி போட்டி நடைபெறும் இலங்கை நாட்டின் கொழும்பு மைதானத்திற்கு கண்டிப்பாக செல்ல வேண்டும். 2. ஐசிசி விதிமுறைகளின்படி, இந்திய வீரர்கள் அங்கு பயிற்சியில் ஈடுபட வேண்டும். 3. போட்டிக்கு முன்பு நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் (கேப்டன் மட்டும்) கலந்து கொள்ள வேண்டும். 4.சரியான நேரத்திற்கு போட்டி நாளன்று (பிப்., 15) மைதானத்திற்கு சென்று நடுவரின் அறிவிப்புக்காகக் (போட்டி ரத்து) காத்திருக்கவேண்டும். இது எல்லாம் நடந்தால் தான் விதி முறைப்படி, இந்திய அணிக்கு 2 புள்ளி கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத் தக்கது.
ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் : இந்தியாவிற்கு சாதகமான சூழல்
புதனன்று ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கிச் சுடுதல் தொடர் தில்லியில் தொடங்க உள்ளது. அதே போல அடுத்த ஆண்டு (2027) ஏப்ரல் 21 முதல் 30ஆம் தேதி வரை உலகக்கோப்பை (ரைபிள்/பிஸ்டல்/ஷாட்கன்) துப்பாக்கிச்சுடுதல் போட்டி நடைபெற உள்ளது. இந்த 2 தொடர்களும் 2028இல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு, சொந்த மண்ணிலேயே இந்திய வீரர் - வீராங்கனைகள் தகுதி பெறுவதற்கான போட்டியாக அமைந்துள்ளது. பொதுவாக ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற வெளிநாடுகளுக்குச் சென்று விளையாட வேண்டும். ஆனால், இந்த முறை இந்தியாவிலேயே இந்தப் போட்டிகள் நடப்பதால், இந்திய வீரர்களுக்கு அது பெரிய சாதகமாக இருக்கும்.
