states

“அதானி வழக்கு, எப்ஸ்டீன் கோப்புகளுக்கு பயந்து மோடி நாட்டை விற்றுவிட்டார்”

“அதானி வழக்கு, எப்ஸ்டீன் கோப்புகளுக்கு பயந்து மோடி நாட்டை விற்றுவிட்டார்”

நாடாளுமன்ற மக்களவையில் செவ்வாயன்றும் இந்தியா - சீனா விவகாரம் குறித்து மக்க ளவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதற்கு பாஜக எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்து, அமளியில் ஈடு பட்டனர். இதனால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.  அவையை விட்டு வெளியில் வந்த ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பின் போது,“அமெரிக்காவின் கடும் அழுத்தம் காரணமாகவே வர்த்தக ஒப்பந்தத்திற்கு பிரதமர் மோடி ஒப்புக்கொண்டுள்ளார். பிரதமர் மோடி மிகவும் பயப்படுகிறார். ஏனென்றால் அவ ருடைய பிம்பத்தை உருவாக்கிய வர்களே இப்போது அந்த பிம்பத்தை உடைக்கிறார்கள். அதானி மீது அமெ ரிக்காவில் ஒரு வழக்கு உள்ளது. அது உண்மையில் மோடி மீதான வழக்கு தான். எப்ஸ்டீன் கோப்புகளில் அமெ ரிக்கா இன்னும் வெளியிடாத பல விஷ யங்கள் உள்ளன. அதன் காரணமாக மோடிக்கு அழுத்தம் உள்ளது. இந்த இரண்டு அழுத்த புள்ளிகள் தான் கடந்த சில மாதங்களாக முடங்கிக் கிடந்த அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந் தத்தில் கையெழுத்திட வைத்துள்ளது. மோடி திங்களன்று இரவு கையெ ழுத்திட்டார். முக்கிய விஷயம் என்ன வென்றால், நமது பிரதமர் சமரசத்திற்கு உள்ளாகியுள்ளார். இதைப்பற்றி மக்கள் சிந்திக்க வேண்டும். முதல் முறை யாக நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரை குறித்து பேச எதிர்க் கட்சி தலைவருக்கு அனுமதி மறுக்கப் பட்டது. மோடி சமரசத்திற்கு உள்ளாகி யிருப்பதால், இந்த வர்த்தக ஒப்பந் தத்தில் இந்திய மக்களின் உழைப்பை விற்றுவிட்டார். குறிப்பாக அவர் இந்திய நாட்டை விற்றுவிட்டார்” என அவர் குற்றம் சாட்டினார்.