கேரள சபாநாயகர் மீது தாக்குதல் முயற்சி
கேரள சட்டமன்றத்தில் சபரி மலை தங்க வழக்கில் பதில ளிக்காத எதிர்க்கட்சித் தலை வர் (காங்கிரஸ் கூட்டணி) வி.டி.சதீச னும், அவரது சகாக்களும் தொடக்கத்திலி ருந்தே அவையின் நடவடிக்கைகளை சீர்குலைக்க முயற்சித்து வருகின்றனர். விவாதத்தைத் தொடர அனுமதிக்காத எதிர்க்கட்சிகளைக் கட்டுப்படுத்த சபா நாயகர் பலமுறை முயன்றார். ஆனால் தேவையற்ற கூச்சல் குழப்பம் தொடர்ந்தது. செவ்வாயன்று சபாநாயகர் ஏ.என். ஷம்சீரை எதிர்க்கட்சிகள் தாக்க முயற்சி மேற்கொண்டனர். எதிர்க்கட்சி எம்எல்ஏ ஒருவர் சபாநாயகரின் இருக்கை அருகே குதித்து ஏறினார். இந்த சம்பவம் தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,”அவையில் மோதலை எதிர்க்கட்சியினர் வேண்டு மென்றே உருவாக்கி வருகின்றனர். நீதிமன்றத்திலிருந்து கடுமையான அடி வாங்கும்போது இங்கு வந்து கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தி, சாதிக்க நினைப்பதே எதிர்க்கட்சிகளின் நோக்கம்” என கடுமையாக விமர்சித்தார்.