கைவிட வேண்டியது யார்?
வெறுப்பைக் கைவிடுங்கள்; இணைந்து செயல்படுவோம் வாருங்கள் என்று காங்கிர சுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஒன்றிய அமைச்சர் சர்வானந்த சோனாவால். அத்துடன் ஒன்றிய அரசு மீது குற்றச்சாட்டு தெரிவிப்பதை கைவிடும்படியும் கோரிக்கை வைத்துள்ளார்.
ஆர்எஸ்எஸ், பாஜக பரிவாரங்கள் மட்டு மல்ல, ஒன்றிய அமைச்சர்களும் பாஜக முதல் வர்களும் வெறுப்பு நடவடிக்கைகளுக்கும் பேச்சுக்களுக்கும் ஒட்டுமொத்த வடிவமாகத் தானே இருக்கிறார்கள். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் மக்க ளைப் பழிவாங்குகிறார்கள். தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களை புறக்கணிப்பது வெறுப்பி னாலா? அன்பினாலா?
பாஜக அரசு ஆட்சிக்கு வந்து 12 ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும் இன்னும் காங்கிரஸ் ஆட்சியையும் நாட்டின் முதல் பிரதமர் நேருவை யும் கூட குறை கூறுவதும் வசைபாடுவதும் தானே இவர்களது செயல்பாடாக உள்ளது. மதச் சார்பின்மை, சமத்துவம், சமூக நீதி, அரசியல மைப்புச் சட்டம், கூட்டாட்சிக் கோட்பாடு அனைத்தையும் குழிதோண்டிப் புதைத்திடும் முயற்சியில் தானே மோடி அரசு மூர்க்கம் காட்டு கிறது. இந்நிலையில் சோனாவாலின் பேச்சு கசாப்புக் கடைக்காரரின் காருண்யமே!
கடந்த 2019 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் காலத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் 40 ஆக இருந்தது. அது 2025 இல் 600 சதவீதம் அதிகரித்துள்ளது என்று ‘இந்தியா வெறுப்புப் பேச்சு கண்காணிப்பு’ எனும் அமைப்பு தெரிவித்துள்ளது. அதாவது 1,318 ஆகியுள்ளது. இதில் பாஜக ஆளும் மாநி லங்கள் 5 மட்டுமே மூன்றில் 2 பங்கு வெறுப்புப் பேச்சுகளுக்கு இடம் கொடுத்துள்ளன. இதில் உ.பி முதலிடம் (266). மற்றவை மகாராஷ்டிரா -193, ம.பி-172, உத்தரகண்ட் - 155, தலைநகர் தில்லி -76 ஆகும். இத்தகைய வெறுப்புப் பேச்சுக்களில் முதலிடம் பிடிப்பவர் ஆதித்யநாத் (86), அடுத்து மோடி (63), அமித் ஷா (58), ஹிமந்தா-(36) பின் தொடருகிறார்கள்.
இது பாஜக ஆளும் மாநிலங்களில் 25 சதவீ தம் அதிகரித்துள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் ஆளும் 7 மாநிலங்களில் 34 சதவீதம் குறைந்துள் ளது. மொத்த வெறுப்புப் பேச்சுக்களில் 88 சத வீதம் பாஜகவினர் பேசியவை என்பதிலேயே வெறுப்பவர்கள் யார்; வெறுக்கப்படுபவர்கள் யார் என்பது பளிச்சென தெரியும். ஒரு நாளுக்கு 4 வெறுப்புப் பேச்சு.
நாட்டுமக்கள் நல்லிணக்கத்துடன் வாழ்வ தற்கு எதிரான கெடு எண்ணத்துடனே, இந்துத் துவா சக்திகள் மட்டுமல்லாது பாஜக அரசுகளும் செயல்படுகின்றன. அதனால் தானே மகாத்மா காந்தி பெயரிலான திட்டத்தை ஒழித்துக் கட்டி னர். கர்நாடக காங்கிரஸ் அரசு நிறைவேற்றிய வெறுப்புக் கருத்து தடுப்புச் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் அம்மாநில ஆளுநர் தாவர் சந்த் கெலாட் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளது இவர்களது அண்மைச் செயல் பாடு. வெறுப்பின் உச்சத்தில் இருந்து கொண்டு வேண்டுகோள் விடுவது ஏமாற்று.
