தொழில் பாதுகாப்புக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்! தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்க மாநாட்டில் தீர்மானம்
திருச்சிராப்பள்ளி, நவ.22 - தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்க வெள்ளி விழா ஆண்டு மற்றும் 25ஆவது மாவட்ட மாநாடு திருச்சியில் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்க மாவட்ட தலைவர் விஷ்ணுவர்தன் தலைமை தாங்கினார். சங்க கொடியை மாவட்ட துணை தலைவர் செல்வம் ஏற்றினார். மாவட்ட துணை செயலாளர் செந்தில் குமார் வரவேற்றார். மாவட்டத் தலை வர் நாகராஜ் முன்னிலை வகித்தார். செயலாளர் அறிக்கையை மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் வாசித்தார். வரவு - செலவு அறிக்கையை மாவட்ட பொருளாளர் சையது முஸ்தபா சமர்ப்பித்தார். டிக் பைபர் நிர்வாக இயக்குனர் தணிகைவேல் துவக்க உரையாற்றினார். தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்க நிறுவனத் தலைவர் சகிலன் சிறப்பு ரையாற்றினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாறன் வாழ்த்துரை வழங்கினார். சங்க மாநிலத் தலைவர் வெள்ளைச் சாமி, மாநில செயலாளர் ராதாகிருஷ் ணன், மாநில பொருளாளர் கோவர்த னன், மாநில துணைத்தலைவர்கள் வீர முத்து, தாமோதரன், சண்முகசுந்தரம் ஆகியோர் பேசினர். மாநாட்டில், கேபிள் டிவி ஆபரேட் டர்களின் தொழில் பாதுகாப்பிற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப் பட்டனர். மாநாட்டில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந் தும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்ட னர். முடிவில் மண்ணச்சநல்லூர் தாலுகா பொருளாளர் சரவணா ராஜா நன்றி கூறினார்.
