tamilnadu

img

கவுகாத்தி டெஸ்ட் தெ.ஆ., நிதான ஆட்டம்

கவுகாத்தி டெஸ்ட் தெ.ஆ., நிதான ஆட்டம்

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி தற்போது டெஸ்ட் தொ டரில் விளையாடி வருகிறது. 2 போட்டிகளைக் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் (கொல்கத்தா) தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து 2ஆவது டெஸ்ட் போட்டி வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் சனிக்கிழமை அன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் களமிறங்கியது. தென் ஆப்பிரிக்க அணி பேட்டர்கள் ஆடுகளத்தின் தன்மை மற்றும் இந்திய பந்து வீச்சாளர்களின் தாக்குதலை கணித்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.  முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 81.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் அதிக பட்சமாக ஸ்டப்ஸ் 49 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் 3 விக்கெட்டுகளை (பும்ரா,  சிராஜ், ஜடேஜா - தலா 1 விக்.,) வீழ்த்தினார். தென் ஆப்பிரிக்க வீரர்கள் முத்துசாமி (25), கெய்ல் (1) ஆகியோர் களத்தில் உள்ளனர். தொடர்ந்து ஞாயிறன்று 2ஆவது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.  ஆட்டம் தொடங்கும் நேரம் : 9:00 மணி   சேனல் : ஸ்டார் ஸ்போர்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)