tamilnadu

img

தொழில்நுட்ப கதிர்

சாட்ஜிபிடி குரூப் சாட்-ஐ பயன்படுத்துவது எப்படி?

ஓபன் ஏஐ நிறுவனம், உலகளவில் சாட்ஜிபிடி(ChatGPT)-இன் குரூப் சாட் அம்சத்தை அறிமு கப்படுத்தியுள்ளது.  ஏஐ அம்சம் கொண்டுள்ள இந்த குரூப் சாட்-இல், 20 பயனர்கள் வரை கலந்துரையாட முடியும். சாட்ஜிபிடி-யின் குரூப் சாட்களில், கட்டுரை, குறிப்பு கள், கேள்விகள் போன்றவற்றை பகிர்ந்து, சாட்ஜிபிடி-யிடம் அவற்றைச் சுருக்கவும், ஒழுங்குபடுத்தவும் கேட்டு, அதனை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.  மேலும், ஒரே குரூப்பில் உள்ள பல ஏஐ-க்கள், பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தனித்தனியாக பதி லளிக்கும் அம்சமும் இதில் உள்ளது. பயண திட்டமிடல், எழுத்து பணிகள், நிரலாக்க உதவி உள்ளிட்ட பல்வேறு பணி¬களை குழுவாக ஒரே நேரத்தில் செய்ய இது உதவுகிறது. புதிய குரூப் சாட்டை உருவாக்குவது எப்படி என பார்க்கலாம்: 1) ChatGPT-யை திறக்கவும். அதில் “New Chat” அருகில் உள்ள Group / New group போன்ற விருப்பத்தை தேர்வு செய்யவும். பின்னர் அக்குழு வுக்கு ஒரு பெயர் இடலாம். 2)Chat திரையின் மேல் வலப்பக் கத்தில் இருக்கும் “people” - ஐகான்- ஐ கிளிக் செய்யவும். குரூப்பில் நண்பர்களை சேர்க்க, invite link அல்லது email மூலம் அழைக்க லாம். அதிகபட்சம் 20 பயனர்கள் வரை சேர்க்க முடியும். 3) முதல் முறையாக Group Chat-இல் சேரும்போது, உங்கள் பெயர், பயனர் பெயர், புகைப்படம் போன்ற சுருக்கமான profile அமைக்கச் சொல்லப்படும். 4) ChatGPT வழங்கும் Coding GPT, Writing GPT, Travel GPT போன்ற AI உதவியாளர்களையும் குழுவில் சேர்க்கும் வசதி இதில் உள்ளது. Group settings மூலம் உறுப்பி னர்களை சேர்க்கவும், நீக்கவும் முடியும்.  குழுவின் பெயரை மாற்றுவது, ஏஐ உதவியாளர்களை மாற்றுவது மற்றும் உரையாடலை export செய்வது போன்ற அம்சங்களும் உள்ளன.

வாட்ஸ் அப்பில் புதிய வடிவில் ‘About’ அம்சம்!

வாட்ஸ் அப் (WhatsApp) தனது ‘About’ (அல்லது “Bio”) அம்சத்தை புதிய வடிவத்தில் மீண்டும் அறிமுகப் படுத்தியுள்ளது. புதிய About அம்சம், இன்ஸ்டாகிராம் Notes போல ஒரு வடிவத்தை கொண்டிருக்கிறது. வாட்ஸ் அப் பயனர்கள், About-இல் பதிவிடும் குறுகிய உரை அல்லது ஈமோஜிகள், 24 மணி நேரத்திற்கு மட்டும் status போல காணப்படும். பயனர்கள் விரும்பினால், Settings-இல் உள்ள “Set About” விருப்பத்தின் மூலம் அந்த நேரத்தை குறைக்கவோ அல்லது நீட்டிக்கவோ முடியும். இந்த About அப்டேட்டில், நண்பர்கள் Reply செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப்பில் About அப்டேட்டை எவ்வாறு அமைப்பது என பார்க்கலாம்: 1. உங்கள் ஸ்மார்ட்போனில் WhatsApp-ஐ திறந்து Settings-க்கு செல்லவும். 2. உங்கள் பெயருக்குக் கீழே தோன்றும் புதிய “What’s happening” என்ற உரையை கிளிக் செய்யவும். 3. மாற்றாக, உங்கள் Profile படத்தை கிளிக் செய்து “Set About” விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். 4. About பிரிவில், உங்கள் குறுகிய உரையை (அதிகபட்சம் 50 எழுத்துகள்) பதிவிடலாம் அல்லது WhatsApp வழங்கும் பரிந்துரைகளிலிருந்து தேர்வு செய்யலாம். பயனர்கள் About அப்டேட் எவ்வளவு நேரம் தெரிய வேண் டும் என்பதைத் தீர்மானிக்கலாம். அதில் 1 மணிநேரம், 8 மணி நேரம், 1 நாள், 2 நாட்கள், 1 வாரம் அல்லது நீங்கள் விரும்பும் காலம் ஆகிய ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்றைத் தேர்வு செய்து Save என்பதை கிளிக் செய்யவும்.