tamilnadu

5 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பம் சிறுமி மரண வழக்கில் ‘போக்சோ’ பதிய நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

5 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பம்  சிறுமி மரண வழக்கில் ‘போக்சோ’ பதிய நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

திண்டுக்கல், நவ. 22 - திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 2020ஆம் ஆண்டு 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டு கொல்லப்பட்ட நிகழ்வில், 5 ஆண்டுக ளுக்குப் பிறகு குற்றவாளி மீது போக்சோ (POCSO) வழக்கு பதிய திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 26.6.2020 அன்று காணாமல் போன 13 வயது சிறுமி, மறுநாள் கிணற் றில் சடலமாக மீட்கப்பட்டார். இதுதொ டர்பாக ராமகிருஷ்ணன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆனால், அவர் மீது பாலியல் வன்கொ டுமை (போக்சோ) வழக்கு பதியாமல், தற்கொலைக்குத் தூண்டியதாக மட்டுமே எரியோடு காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர். குற்றவாளி மீது போக்சோ வழக்கு பதியக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய மாவட்டச் செய லாளர் ஆர்.சச்சிதானந்தம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அப்போதைய மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.முத்துச்சாமி ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தினர். தொடர்ந்து ஜூலை மாதம் சிபிஎம் வேடசந்தூர் ஒன்றியச் செய லாளர் முனியப்பன் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திலும் இவர்கள் பங்கேற்று நீதி கேட்டனர். பழனி கோட்டாட் சியர் (ஆர்டிஓ) சிறுமியின் வயதை சுட்டிக் காட்டி பரிந்துரைத்தும், பெற்றோர் முதல்வ ரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வில்லை. இந்நிலையில், இந்த வழக்கு திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, காவல்துறையை கண்டித்ததோடு உடன டியாக போக்சோ பிரிவின் கீழ் வழக்கை மாற்ற உத்தரவிட்டார். 5 ஆண்டுகாலப் போராட்டத்திற்குப் பின் கிடைத்துள்ள இந்த உத்தரவால் பெற்றோர் நிம்மதி அடைந்துள்ளனர்.