tamilnadu

img

முதல் பொது வேலை நிறுத்தமும் தியாகிகளின் அர்ப்பணிப்பும்!

முதல் பொது வேலை நிறுத்தமும்  தியாகிகளின் அர்ப்பணிப்பும்!

1980-களில் உலக நிதி நிறு வனங்களின் கட்டளைப்படி அமலாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக, 1982 ஜனவரி 19 அன்று உழைப்பாளி வர்க்கம் நடத்திய நாடு தழுவிய போராட்டமே சுதந்திர இந்தியாவின் முதல் பொதுவேலைநிறுத்தமாகும். சிஐடியு (CITU), ஏஐடியுசி (AITUC) உள்ளிட்ட மத்திய  தொழிற்சங்கங்கள் இணைந்து ‘தேசியப் பிரச்சாரக் குழு’ அமைத்து இப்போராட்டத்தை  முன்னெடுத்தன. 1981 ஜூன் மாதம் மும்பை யில் நடந்த மாநாடும், நவம்பரில் தில்லியில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்ற  பேரணியும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்திற்கு அடித்தளமிட்டன. அடக்குமுறையை வென்ற எழுச்சி இந்த எழுச்சியைக் கண்டு அஞ்சிய அன்றைய இந்திரா காந்தி அரசு, போராட் டத்தை ‘தேசத் துரோகம்’ என வர்ணித்தது.  ஆட்சியாளர்கள் ‘சஞ்சய் படை’ என்ற பெயரில்  குண்டர்களைக் கொண்டு வன்முறையைத்  தூண்டினர். வானொலியும் தொலைக்காட்சி யும் சீர்குலைப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டன. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முன்னெச்சரிக்கை என்ற பெயரில் கைது  செய்யப்பட்டனர். பீகார் போன்ற மாநிலங்களில்  ‘கண்டதும் சுட’ உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மிரட்டல்களையும் மீறி கேரளா, மேற்கு வங்கம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் முழு அடைப்பாகவும், தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் மாபெரும் வெற்றியாகவும் இப்போராட்டம் அமைந்தது. மறக்க முடியாத தியாகம் தமிழகத்தில் தொழிலாளர்களுக்கு ஆதர வாகக் களமிறங்கிய  விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டது. மயிலாடுதுறை அருகே திரு மெய்ஞானத்தில் அஞ்சான், நாகூரான் ஆகி யோரும், மன்னார்குடியில் ஞானசேகர னும் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் 10-க்கும்  மேற்பட்டோர் தியாகிகளாயினர். இந்த  வர்க்கப் பாசத்தை நினைவுகூரும் வகையில்,  1983 முதல் சிஐடியு உறுப்பினர்கள் ஆண்டு தோறும் ஒரு ரூபாய் நிதி வழங்கி விவசாய  இயக்கத்தின் வளர்ச்சிக்குத் தோள் கொடுத்து வருகின்றனர். பிப்ரவரி 12: புதிய அறைகூவல் அன்று தொடங்கிய நவதாராளமயக் கொள்கைகள் இன்று மோடி அரசின் கீழ் கார்ப்பரேட் - மதவாதக் கூட்டணியாகத் தீவிர மடைந்துள்ளது. பொதுத்துறை விற்பனை,  தொழிலாளர் சட்டப் பறிப்பு மற்றும் டிரம்ப்பின்  அமெரிக்க மேலாதிக்கத்திற்குப் பணிந்து போகும் கொள்கைகளால் உழைக்கும் மக்கள் வஞ்சிக்கப்படுகின்றனர். ஏகாதிபத்தியத் தாக்குதல்களை முறியடிக்கவும், மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும் பிப்ரவரி 12 அன்று ஐக்கிய விவசாயிகள் முன்னணியும் தொழிற்சங்கங்களும் இணைந்து நடத்த வுள்ள பொதுவேலைநிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வதே ஜனவரி 19 தியாகிகளுக்கு நாம் செய்யும் உண்மையான வர்க்கக் கடமை யாகும்.