tamilnadu

img

திருத்தங்கல்லில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி தொடக்கம் அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டினார்

திருத்தங்கல்லில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி தொடக்கம் அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டினார்

சிவகாசி, ஜன.18- சிவகாசியிலிருந்து விருதுநகர் செல்லும் சாலை யில், திருத்தங்கல் பகுதியில்  ரயில்வே மேம்பாலம் அமை க்க வேண்டும் என்று சிவகாசி மக்கள் 30 ஆண்டு காலமாக  கோரி வருகின்றனர். இந்நிலை யில் திமுக தேர்தல் அறிக் கையில் நிறைவேற்றப்படும் என உறுதி அளிக்கப்பட்ட நிலையில், திருத்தங்கலில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான பணியை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்ன ரசு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் அமைச் சர் பேசுகையில், 800 மீட்டர் நீளத்தில் ரூ.45 கோடி 60  லட்சம் மதிப்பீட்டில் இந்த  மேம்பாலம் அமைக்கப்பட வுள்ளதாகவும், 15 மாதங்க ளில் பணிகளை நிறைவு  செய்ய திட்டமிடப்பட்டுள்ள தாகவும் தெரிவித்தார். இதே போல், சிவகாசி நகரில்  போக்குவரத்து நெரிசலைக்  குறைக்கும் வகையில் ரூ.58  கோடி மதிப்பீட்டில் இரண் டாம் கட்ட சுற்றுவட்டச் சாலை அமைக்கும் பணியும் நடை பெற்று வருவதாகக் கூறி னார். ஏற்கனவே சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் கட்டி  முடிக்கப்பட்டுள்ள நிலை யில், தற்போது திருத்தங்கல்  லிலும் மேம்பாலம் அமைக்  கும் பணி தொடங்கியுள்ள தாக அமைச்சர் சுட்டிக்காட்டி னார். தேர்தல் காலத்தில் கூறப்  படும் வாக்குறுதிகள் நிறை வேற்றப்படாது என பலர்  விமர்சித்த நிலையில், சொன் னதை செயலில் நிரூபித்த பெருமை முதல்வர் மு.க.ஸ்டாலினையே சாரும் என அவர் தெரிவித்தார். எதிர்கால சமூகத்தை உருவாக்கும் வகையில் திட்  டங்களை வகுத்து செயல் படுத்தும் இந்த அரசு, நகர்ப்  புற வளர்ச்சிக்கும் முக்கியத்  துவம் அளித்து நடவடிக்கை  எடுத்து வருவதாக அமைச் சர் தெரிவித்தார். ஒன்றிய அர சிடம் தொடர்ந்து நிதி கோரப் பட்டாலும், தமிழகத்திற்கு உரிய நிதி முழுமையாக கிடைப்பதில்லை எனக் கூறிய அவர், ஜிஎஸ்டி வரி  முறையாக செலுத்தப்பட் டும் அதற்கான பங்குத்  தொகை வழங்கப்படுவ தில்லை என்றார். இந்நிலை யிலும், ஒன்றிய அரசின் துணை இருந்தாலும் இல்லா விட்டாலும், மாநில முதல்வர்  அனைத்து வளர்ச்சித் திட் டங்களுக்கும் தேவையான  நிதி ஒதுக்கீட்டை செய்து வரு வதாக அவர் தெரிவித்தார். தமிழக அரசு உள்கட்ட மைப்பு வசதிகளை ஆர்வத்  துடன் மேம்படுத்தி வருவ தால், சிவகாசி நகரம் முன் னேற்றம் கண்டு மறுமலர்ச்சி பெறுகிறது என்றும் அமைச்  சர் கூறினார். மேம்பாலம்  கட்டும் பணிக்காலத்தில் ஏற்  படும் தற்காலிக சிரமங்களை பொதுமக்கள் பொறுத்துக் கொண்டு, நீண்டகால தீர்  வுக்காக நடைபெறும் இத்திட்  டத்திற்கு ஒத்துழைப்பு வழ ங்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார். இந்த நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர் ஜி.அசோ கன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.