tamilnadu

வாழைக்கன்றுகளை சேதப்படுத்தும் பன்றிகள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க சிபிஎம் கோரிக்கை

வாழைக்கன்றுகளை சேதப்படுத்தும் பன்றிகள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க சிபிஎம் கோரிக்கை

சிவகங்கை, ஜன.18- சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பகுதியில் வாழைக்கன்றுகளை பன்றிகள் கூட்டமாக வந்து சேதப்படுத்தி வருவதால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், பன்றிகளை கட்டுப்  படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்புவனம் ஒன் றியச் செயலாளர் ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். திருப்பாச்சேத்தி பகுதியில் வாழை,  கரும்பு, தென்னை, நெல் உள்ளிட்ட விவ சாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படு கிறது. குறிப்பாக முகூர்த்த நாட்களை கணக்கிட்டு பயிரிடப்பட்டிருந்த வாழைக் கன்றுகளை பன்றிகள் கூட்டமாக வந்து நாசம் செய்துள்ளதால், விவசாயிகள் கடும்  பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக அவர் தெரி வித்துள்ளார். வாழைத்தார் அறுவடை செய்யப்பட்ட பின்னரும், பக்கக் கன்றுகள் மூலம் தொட ர்ந்து மூன்று மாதங்கள் வரை வாழை இலை  அறுவடை செய்ய முடியும். இதனால் திருப்  பாச்சேத்தி பகுதியில் நாட்டு வாழை மற்றும்  ஒட்டு வாழை அதிகளவில் பயிரிடப்படு கிறது. நடவு செய்த 10-வது மாதத்திலிருந்து  பக்கக் கன்றுகள் மூலம் மூன்று மாதங்கள் வரை வாழை இலை அறுவடை நடைபெறு வது குறிப்பிடத்தக்கது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பாச்சேத்தி பகுதியில் பன்றி கள் கூட்டமாக வந்து வாழை மற்றும் கரும்பு  பயிர்களை சேதப்படுத்தி வருவதால், விவ சாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வரு வதாக ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். பன்றி களால் ஏற்படும் சேதத்திற்கு இதுவரை எந்த விதமான இழப்பீடும் வழங்கப்படவில்லை என்றும், பன்றிகளை ஒழிக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும்  அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், வனத்துறை உடனடியாக தலை யிட்டு பன்றிகளை கட்டுப்படுத்த நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்  கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு  வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியு றுத்தப்பட்டுள்ளது.