மானாமதுரை ராம்நகர் 3-வது வீதியில் தரமற்ற சாலை
சிவகங்கை, ஜன.18- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட ராம் நகர் மூன்றா வது வீதியில் அமைக்கப் பட்ட தார் சாலை, போடப் பட்ட மறுநாளே தார் மற்றும் கற்கள் வெளியில் குவியும் அளவுக்கு தரமற்ற நிலை யில் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ள னர். இந்த நிலை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் மக்கள் சந்திப்பு இயக் கத்தினரிடம் மக்கள் நேரடி யாக புகார் தெரிவித்தனர். மானாமதுரை நகராட் சிக்கு உட்பட்ட ராம் நகர் பகு தியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற் றது. இதில் கட்சியின் ஒன்றிய செயலாளர் முனியராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் விஜயகுமார், சிஐடியு முன் னாள் மாவட்டச் செயலாளர் வீரய்யா, கட்டுமானத் தொழி லாளர் சங்க நிர்வாகி பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, ராம் நகர் மூன்றாவது வீதியில் சமீ பத்தில் போடப்பட்ட தார் சாலை, மறுநாளே தார் மற் றும் கற்கள் குவிந்து கிடப் பதை மக்கள் சுட்டிக்காட்டி னர். இதனை கையால் அள் ளிக் கொள்ளும் அளவுக்கு சாலை அமைக்கப்பட்டுள்ள தாக அப்பகுதியில் வசிக்கும் கருப்பையா என்ற தொழி லாளி வேதனையுடன் தெரி வித்தார். தரமற்ற சாலை அமைப் பின் பின்னணியில் உள்ள முறைகேடுகளை விசா ரித்து, பொறுப்பான அதிகாரி கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ராம் நகர் மூன்றாவது வீதியில் சாலை யை மீண்டும் தரமாக அமை க்க வேண்டும் என்றும் மக் கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கள் வலியுறுத்தியுள்ளனர்.
