இராஜபாளையத்தில் ரயில்வே கேட் நீண்ட நேரம் அடைப்பு 25 நிமிடம் காத்திருந்து பொதுமக்கள் அவதி
இராஜபாளையம், ஜன.18- இராஜபாளையம் ரயில் நிலையத்தில் குருவாயூரிலி ருந்து மதுரை செல்லும் பயணிகள் ரயிலில் பயணிகள் அதிகமாக இருந்ததால், அனைத்து பயணிகளையும் ஏற்றிய பின்னரே ரயில் புறப்பட்டுச் சென்றது. இதன் காரண மாக, வழக்கமாக மூன்று நிமிடங்கள் மட்டுமே எடுக்கும் நிறுத்த நேரம் சுமார் 25 நிமிடங்கள் வரை நீடித்ததாக தெரி விக்கப்படுகிறது. பயணிகள் ஏறிய பின்பு ரயில் தாமதமாக புறப்பட்ட தால், மலையடிப்பட்டி ரயில்வே கேட் பகுதியில் பர பரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்குவதற்காக மதுரை ரயில் நிலையத்தில் காத்திருந்தது. இந்த சூழ்நிலையில், மலை யடிப்பட்டி ரயில்வே கேட் மதியம் 1.45 மணிக்கு மூடப்பட்டு, மதுரை செல்லும் ரயில் 2.15 மணியளவில் சென்ற பின்னரே மீண்டும் திறக்கப்பட்டது. இதனால், சுமார் 25 நிமிடங்களுக்கும் மேலாக ரயில்வே கேட் திறக்கப்படாமல் இருந்ததால், கொளுத்தும் வெயி லில் பொதுமக்கள், பெண்கள் மற்றும் கைக் குழந்தைகளு டன் இருந்தவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். பொங் கல் விடுமுறை முடிந்து தங்களது ஊர்களுக்குச் செல்ல ஏராளமான பயணிகள் ரயிலில் ஏற முயன்றதால், நெரிசல் ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்த ரயில்வே காவல்துறை யினர் பயணிகளை வரிசையாக நிறுத்தி ஒருவர் பின் ஒரு வராக ரயிலில் ஏறச் செய்ததாக ரயில் நிலைய வட்டா ரங்கள் தெரிவித்தன. இதுவே ரயில் தாமதத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. பொதுமக்கள், ரயில்வே கேட்களை 10 முதல் 15 நிமி டங்களுக்குள் திறந்து விடும் வகையில் நேர நிர்ணயம் செய்து செயல்பட்டால், போக்குவரத்து பாதிப்பு மற்றும் பொதுமக்களின் சிரமம் குறையும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
