tamilnadu

img

இஸ்ரேலிய இந்துத்துவ சினிமா: திரைமொழி வழியே பரப்பப்படும் வெறுப்பு அரசியல் - சு.பொ.அகத்தியலிங்கம்

இஸ்ரேலிய இந்துத்துவ சினிமா:  திரைமொழி வழியே பரப்பப்படும் வெறுப்பு அரசியல்

சினிமா என்பது வெறும் பொழுது போக்குச் சாதனமல்ல; அது ஒரு வலிமையான கருத்துருவாக்கக் கருவி. இதனை இஸ்ரேலிய சியோனிசமும், இந்திய இந்துத்துவமும் எவ்வாறு தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்து கின்றன என்பதை விளக்குகிறது இ.பா. சிந்தன் எழுதிய  ‘இஸ்ரேலிய இந்துத்துவ சினிமா: வெறுப்பின் கொற்றம் வீழ்க!’ என்னும் நூல். ஒன்பது கட்டங்  களாகப் பிரிக்கப் பட்ட சினிமா வரலாறு பாலஸ் தீனத்தை ஆக்கிர மித்து இஸ்ரேலை நிலைநிறுத்த மேற் கொள்ளப்பட்ட அரசியல் சதியை ஒன்பது காலகட்டங்களாகப் பிரித்து இந்நூல் ஆராய்கிறது. • தொடக்க காலத்தில் (1948 வரை) உலக நாடுகள் மத்தியில் பச்சாதாபத்தைத் திரட்டும் படங்கள். •     பின்னர் ராணுவமே நிதி ஒதுக்கி, ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தும் படங்கள். •    பாலஸ்தீனியர்களை ‘ஊடுருவல் காரர்களாக’ச் சித்தரித்து தேசபக்தியைத் தூண்டும் காலகட்டம். • வெற்றிக் கொண்டாட்டங்கள் மற்றும் ‘அரபு எதிர்ப்பு’ மனநிலையை விதைத்த போர் கால சினிமாக்கள். •இஸ்ரேலை ஜனநாயக நாடாகவும், பாலஸ்தீனர்களைப் பயங்கரவாதி களாகவும் காட்டிய காலம். •சர்வதேச நெருக்கடிகளால் ‘பாலஸ்தீனர் களும் மனிதர்களே’ எனச் சில காலம் மென்மைப்போக்கைக் காட்டிய படங்கள். • மீண்டுமொரு வன்மம் மற்றும் அச்சம் கலந்த படங்களின் வருகை. • அரசியல் நீக்கம் செய்யப்பட்ட குடும்பப் படங்களின் வழி பாலஸ்தீனப் பிரச்சினை யை மறக்கடித்தல். • தற்போது (2023 முதல்) மிக வக்கிரமான, வெறுப்பைக் கக்கும் பாசிசத் திரைப்படங் களின் காலம். இந்துத்துவத்துடனான ஒப்பீடு இஸ்ரேல் பயன்படுத்திய அதே உத்தியை இன்று இந்தியத் திரையுலகில் ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’, ‘கேரளா ஸ்டோரி’ போன்ற படங்கள் வழி இந்துத்துவ சக்திகள் முன்னெடுப்பதை ஆசிரியர் எச்சரிக்கிறார். வெறுப்புப் பிரச்சாரத்தில் இஸ்ரேலின் பாதையிலேயே இந்தியாவும் பயணிப்பதை இந்நூல் சுட்டிக்காட்டுகிறது. திரைப்படங்களை அரசியல் பார்வை யோடு அணுக விரும்புவோரும், பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தின் பின்னணியைப் புரிந்துகொள்ள விரும்புவோரும் வாசிக்க வேண்டிய மிக முக்கியமான ஆவணம் இது. இஸ்ரேலிய இந்துத்துவ சினிமா: வெறுப்பின் கொற்றம் வீழ்க! ஆசிரியர்: இ.பா.சிந்தன் வெளியீடு: பாரதி புத்தகாலயம்  பக்கங்கள்: 72 | விலை: ₹80

செவ்வருக்கை: சாதி ஆணவத்தின் உயிர்சாட்சிக் கதைகள்

“இக்கதைகள் நடந்த இடமும் தரவு களும் இன்றும் உயிரோடு இருக்கின்றன” என்ற நூலாசிரியர் எம்.எம்.தீன் அவர்களின் வாக்குமூலத்தோடு தொடங்குகிறது ‘செவ்வருக்கை’ சிறுகதை தொகுப்பு. பல நூற்றாண்டுகளாக சமூகத்தின் வேர்களில் படிந்துள்ள சாதி ஆணவம், எவ்வாறு தனிமனித வாழ்வையும் சமூகத்தையும் சிதைக்கிறது என்பதை 12 சிறுகதைகள் வழி இந்நூல் உரக்கப் பேசுகிறது. பல்வேறு முகங்களில் சாதிய வன்மம் நிலவுடைமைச் சமூகத்தின் கோரப்பற்  களால் கடிக்கப்பட்டு, பின்னர் தெய்வங் களாக்கப்படுபவர்களின் வரலாற்றைச் ‘செவ்வருக்கை’, ‘சுதாரி’, ‘கன்னிக்குழி’ ஆகிய கதைகள் ரத்தமும் சதையுமாக விவ ரிக்கின்றன.  சாதி என்ற புற்றுநோய் இஸ்லாம் மற்றும் கிறித்தவ மதங்களுக்குள்ளும் ஊடுருவி இருப்பதை ‘நாசுவம்’, ‘ஊரு ஒப்பாது’ போன்ற கதைகள் அம்பலப்படுத்து கின்றன. உளவியலும் அதிகாரமும் சாதி ஆணவக் கொலைகளைத் தாண்டி, அது குறித்த ‘பயம்’ எப்படி ஒரு சமூ கத்தின் உளவிய லைக் கட்டுப் படுத்துகிறது என்ப தை ‘பாடும் துண்டு நிலா’ படம் பிடிக்கிறது. அதிகார வர்க்கத்தின் மனதில் ஒளிந்துள்ள சாதிக்கயிற்றைக் ‘கைக்கயிறு’ கதையும், ஊராட்சித் தலைவர் பதவிகள் சாதி ஆதிக்கக் கரங்களில் பொம்மைகளாக இருப்பதை ‘சாதி நாற்காலி’ கதையும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்குள்ளும் இருக்கும் உயர்வு தாழ்வு மனநிலையை ‘வன்மப் பழி’ கதை பேசுகிறது. எழுப்பும் கனல் ஒவ்வொரு நாளும் புதுப்புது வடிவங் களில் வெடிக்கும் சாதி ஆணவத்திற்கு எதிரான போராட்டக் கனலை விசிறிவிடும் கங்குகளாக  இக்கதைகள் அமைந்துள்ளன.  கதையின் போக்கையும் கதாபாத்திரங் களையும் விவரிப்பதைவிட, ஒவ்வொரு வாசகரும் இக்கதைகளை வாசித்து, சாதி ஆணவத்திற்கு எதிராகக் கோபத்தையும் கண்ணீரையும் வெளிப்படுத்த வேண்டும் என்பதே இந்நூலின் நோக்கம். பாரதி புத்தகாலய வெளியீடாக வந்துள்ள இத்தொகுப்பு, சமூக மாற்றத்திற்கான ஒரு முக்கியமான கருவி. செவ்வருக்கை ஆசிரியர்: எம்.எம்.தீன்  வெளியீடு: பாரதி புத்தகாலயம்  பக்கங்கள்: 156 | விலை: ₹160