tamilnadu

விருதுநகர் சந்தை குண்டூர் வத்தல், வெள்ளைப் பட்டாணி, பாசிப் பயறு விலை உயர்வு கடலை எண்ணெய், துவரை, உளுந்தம் பருப்பு விலை குறைவு

விருதுநகர் சந்தை குண்டூர் வத்தல், வெள்ளைப் பட்டாணி, பாசிப் பயறு விலை உயர்வு கடலை எண்ணெய், துவரை, உளுந்தம் பருப்பு விலை குறைவு

விருதுநகர், ஜன.18- விருதுநகர் சந்தையில் இந்த வாரம் அத்தி யாவசிய உணவுப் பொருட்களின் விலை யில் கலந்த மாற்றங்கள் காணப்பட்டன. குண்  டூர் வத்தல், வெள்ளைப் பட்டாணி, பாசிப் பயறு, பாசிப் பருப்பு ஆகியவற்றின் விலை உயர்ந்த நிலையில், கடலை எண்ணெய், பாமாயில், துவரம் பருப்பு மற்றும் உருட்டு உளுந்தம் பருப்பு உள்ளிட்டவற்றின் விலை  சற்று குறைந்துள்ளது. வாரந்தோறும் வெளியிடப்படும் அத்தி யாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் விவரம் பின்வருமாறு: கடலை எண்ணெய் (15 கிலோ டின்) கடந்த வாரம் ரூ.2,850க்கு விற்பனையான நிலை யில், இந்த வாரம் டின் ஒன்றுக்கு ரூ.50  குறைந்து ரூ.2,800க்கு விற்பனை செய்யப்படு கிறது. பாமாயில் (15 கிலோ டின்) கடந்த வாரம்  ரூ.2,000 இருந்தது. இந்த வாரம் ரூ.5 குறைந்து  ரூ.1,995 ஆக உள்ளது. குண்டூர் வத்தல் (100 கிலோ, ஏசி வகை)  கடந்த வாரம் ரூ.14,000 முதல் ரூ.17,000 வரை  விற்கப்பட்டது. சந்தைக்கு வரத்து குறைந்த தால், குவிண்டாலுக்கு ரூ.2,000 வரை உயர்ந்து, தற்போது மூட்டை ஒன்று ரூ.16,000  முதல் ரூ.19,000 வரை விற்பனையாகிறது. துவரம் பருப்பு (நாடு வகை, 100 கிலோ)  கடந்த வாரம் ரூ.10,200 முதல் ரூ.10,400 வரை  விற்கப்பட்டது. வரத்து அதிகரித்ததன் காரண மாக மூட்டைக்கு ரூ.100 குறைந்து, ரூ.10,100  முதல் ரூ.10,300 வரை விற்பனை செய்யப்படு கிறது. துவரம் பருப்பு (நயம் லயன் புதுசு வகை)  கடந்த வாரம் ரூ.10,400 முதல் ரூ.10,600 வரை  இருந்தது. இந்த வாரம் ரூ.200 குறைந்து, ரூ. 10,200 முதல் ரூ.10,400 வரை விற்கப்படு கிறது. உருட்டு உளுந்தம் பருப்பு கடந்த வாரம்  ரூ.9,800 இருந்த நிலையில், இந்த வாரம் ரூ. 600 குறைந்து மூட்டை ஒன்று ரூ.9,200க்கு விற்பனையாகிறது. பாசிப் பருப்பு (100 கிலோ) கடந்த வாரம் ரூ. 9,200 முதல் ரூ.9,400 வரை விற்கப்பட்டது. இந்த வாரம் மூட்டைக்கு ரூ.100 உயர்ந்து,  ரூ.9,300 முதல் ரூ.9,450 வரை விற்பனையாகி றது. கடலை புண்ணாக்கு (100 கிலோ) கடந்த  வாரம் ரூ.4,900 இருந்தது. இந்த வாரம் ரூ. 200 குறைந்து ரூ.4,700க்கு விற்கப்படுகிறது. எள் புண்ணாக்கு (50 கிலோ) கடந்த வாரம்  ரூ.1,900 இருந்த நிலையில், ரூ.50 குறைந்து ரூ.1,850 ஆக உள்ளது. பட்டாணி பருப்பு (100 கிலோ) கடந்த வாரம் ரூ.4,200 முதல் ரூ.4,300 வரை விற்கப்  பட்டது. இந்த வாரம் ரூ.100 உயர்ந்து, ரூ. 4,300 முதல் ரூ.4,350 வரை விற்பனையா கிறது. வெள்ளைப் பட்டாணி பருப்பு கடந்த வாரம் ரூ.4,100 முதல் ரூ.4,200 வரை இருந்தது.  இந்த வாரம் மூட்டைக்கு ரூ.300 உயர்ந்து, ரூ. 4,400 முதல் ரூ.4,600 வரை விற்கப்படுகிறது. பாசிப் பயறு (100 கிலோ) கடந்த வாரம் ரூ. 7,600 முதல் ரூ.7,700 வரை விற்பனையான நிலையில், இந்த வாரம் ரூ.100 உயர்ந்து,  ரூ.7,700 முதல் ரூ.7,800 வரை விற்பனை யாகிறது. இதனிடையே, மல்லி, முண்டு வத்தல்,  நல்லெண்ணெய் உள்ளிட்ட பிற அத்தியா வசிய உணவுப் பொருட்களின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை என சந்தை வட்டா ரங்கள் தெரிவித்தன.