tamilnadu

img

ஆந்திராவிலிருந்து 510 கி.மீ. சைக்கிளிலேயே வந்த தோழர்கள்

ஆந்திராவிலிருந்து 510 கி.மீ. சைக்கிளிலேயே வந்த தோழர்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அகில இந்திய 24-ஆவது மாநாட் டுப் பேரணி - பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக 2 முதிய தோழர்கள், ஆந்திராவிலிருந்து 510 கிலோ மீட்டர் தூரம் மிதிவண்டியிலேயே வந்தனர். அவர்களை கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ. சண்முகம் வரவேற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் மதுரை தமுக்கம் மைதானத்தில் 24-ஆவது அகில இந்திய மாநாடு, கடந்த ஏப்ரல்  2 முதல் 6 வரை  நடைபெற்றது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த நூற்றுக்கணக்கான பிரதி நிதிகள் இதில் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆந்திரா மாநிலம்  திருப்பதியில் இருந்து குப்புசாமி (58), சல்லா வெங்கட்டய்யா (72) ஆகிய இரு தோழர் கள் 520 கிலோமீட்டர் சைக்கிளிலேயே பயணம் செய்து,சனிக்கிழமையன்று பிற்பகல் மதுரை வந்து சேர்ந்தனர். சல்லா வெங்கட்டயா, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சித்தூர் மாவட்ட முன்னாள் செயலாளர் ஆவார்.  கே. குப்புசாமி, கட்சியின் ஆந்திர மாநில நாளிதழான பிரஜாசக்தியின் முன்னாள் ஊழியர். தற்போது, ரேணு குண்டாவில் ‘ஜன விஞ்ஞான வேதிகா’ (மக்கள் விஞ்ஞானக் கழகம்) என்ற அமைப் பின் மண்டலச் செயலாளராக பணி செய்து வருகிறார். இந்நிலையில், குப்புசாமி தங்க ளின் பயணம் குறித்து, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, “திருப்பதி கட்சி அலுவல கத்தில் இருந்து மார்ச் 29 அன்று எங்களது பயணத்தை  தொடங்கினோம். ஏப்ரல் 5 பிற் பகல் 12 மணியளவில் மதுரை ஒத்தக்கடை யை வந்து சேர்ந்தோம். நாங்கள் வருகின்ற வழி எல்லாம் கட்சியின் கொள்கைகளை பொதுமக்களிடம் பரப்பிய வண்ணம் எங்கள் பயணத்தை மேற்கொண்டோம்” என்று தெரி வித்தார். மேலும், “நாங்கள் மேற்கொண்ட இந்த பயணம் இளைஞர்களுக்கு ஊக்கமாக அமையும்” என்ற அவர், “கடந்த 2008- ஆம் ஆண்டு நடைபெற்ற 19-ஆவது அகில இந்திய மாநாட்டில் இதேபோன்று ரேணி குண்டாவில் இருந்து கோயம்புத்தூர் வரை சைக்கிளில் பயணம் மேற்கொண்டோம். அதன் தொடர்ச்சியாக இப்போதும் இந்த பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டுள் ளோம். சித்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை புதுக்கோட்டை, உள்ளிட்ட மாவட் டங்களை கடந்து மதுரை வந்து சேர்ந்துள் ளோம். ஆங்காங்கே கட்சித் தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் எங்களுக்கு நல்ல வரவேற்பு கொடுத்தனர்’ என்றும் குறிப்பிட்டார். மாநாடு நடைபெறும் தமுக்கம் மைதா னத்திற்குள் வந்த இரண்டு தோழர்களை யும் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர் உ.  வாசுகி, ஆந்திர மாநிலச் செயலாளர் வி.  சீனிவாச ராவ், உமாமகேஸ்வர ராவ் ஆகி யோர் வரவேற்றனர்.