பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த ஐபிஎஸ் அதிகாரி
பாஜக கூட்டணி ஆளும் மகா ராஷ்டிர மாநிலத்தின் நாக் பூருக்கு அருகே உள்ளது இமாம்வாடா. வெள்ளிக்கிழமை அன்று இமாம்வாடா காவல்நிலையத்தில் 28 வயதுமிக்க பெண் மருத்துவர் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக பெண் மருத்துவர் அளித்த புகாரில்,”தனக்கும் ஐபிஎஸ் அதி காரிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த 2022ஆம் ஆண்டு நட்பு ஏற்பட்டது. அப் போது அவர் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயா ராகி வந்தார். அதே நேரத்தில் நான் எம்பி பிஎஸ் படிப்பை தொடர்ந்து வந்தேன். பின்னர் எங்களின் ஆன்லைன் உரை யாடல்கள் விரைவில் தொலைபேசி அழைப்புகளாக மாறியது. நண்பர்களான பிறகு, குற்றம்சாட்டப்பட்டவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி யளித்து தன்னுடன் உடல் உறவில் ஈடு பட்டார். ஆனால் ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவுடன் அவர் தன்னை தவிர்க்கத் தொடங்கினார். மேலும் தன்னை திரு மணம் செய்து கொள்ளவும் மறுத்து விட்டார். அந்த அதிகாரியின் குடும்பத்தி னரும் தனக்கு பதிலளிக்கவில்லை” என அவர் கூறியுள்ளார். புகாரின் அடிப்படை யில் சனிக்கிழமை அன்று ஐபிஎஸ் அதி காரி மீது பாலியல் வன்கொடுமை குற்றச் சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டு, விசாரணை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.