tamilnadu

img

மரியாதை செலுத்திய ஆட்சியர், எம்.பி.,

மரியாதை செலுத்திய ஆட்சியர், எம்.பி., 

தேனி,ஜன.16- தேனி மாவட்ட நிர்வாகம், செய்தி மக்கள் தொட ர்புத்துறை மற்றும் சுற்றுலாத் துறை சார்பில் கூடலூர் நக ராட்சி, லோயர் கேம்ப் பகுதி யில்  அமைந்துள்ள  கர்னல் ஜான் பென்னிகுவிக் மணி மண்டபத்தில் உள்ள அன்னா ரின் உருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், தேனி மக்களவை உறுப்பினர் தங்க தமிழ்ச் செல்வன்  முன்னிலையில் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார்.  கலை நிகழ்ச்சிகள் அதனைத்தொடர்ந்து  நடைபெற்ற கர்னல் ஜான் பென்னிகுவிக்  பிறந்தநாள் பொங்கல் விழாவில் தமிழர்க ளின் பாரம்பரியத்தை போற் றும் விதமாக  பாரம்பரிய உடையணிந்து மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங்  ,தேனி மக்களவை உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் ஆகி யோர் உழவர்களின் உழைப் பிற்கும், உயர்வுக்கும் துணை நிற்கும் வகையில் உழவர் கள் போற்றி வணங்கக் கூடிய காளை மாட்டுவண்டி யில்  அமர்ந்து, ஓட்டிச்சென்று  மக்களுடன் பொங்கல் விழா வினை கொண்டாடினர்.  பின்னர் மாணவ, மாண வியர்களின் பரதநாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது. மேலும், இவ் விழாவில் கோலிகுண்டு, கிட்டி, பம்பரம் சுற்றுதல், மான்கொம்பு சுற்றுதல், மண்பானை உடைத்தல், சிலம்பாட்டம்  போன்ற தமி ழர்களின் பாரம்பரிய விளை யாட்டுப் போட்டிகளும், கலை பண்பாட்டுத்துறை யின் சார்பில் பரதநாட்டியம், நையாண்டி மேளம், தப்பாட் டம், தேவராட்டம், கரகாட் டம், மாடாட்டம், மயிலாட் டம் உள்ளிட்ட  தமிழர்க ளின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடை பெற்றது.