tamilnadu

img

நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 810 கோடியில் நலத் திட்டங்கள்!

நாமக்கல், அக். 22 - நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் நாமக்கல் - சேலம் ரோட்டில்  உள்ள பொம்மகுட்டைமேட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ரூ. 366 கோடியில் 140 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், ரூ. 298 கோடியில் 134 நிறைவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், 16 ஆயிரம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட  உதவிகளை வழங்கியும் உரையாற்றினார். முன்னதாக, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், நாமக்கல் - பரமத்தி சாலையில் செலம்பக் கவுண்டர் பூங்கா வளாகத்தில், 8 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிலையை செவ்வாயன்று நண்பகல் 1.45 மணிக்கு திறந்து வைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின், அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலை ஞரின் உருவப்படத்துக்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். கலைஞரின் உருவச்சிலை அருகில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலையையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் வணங்கினார். சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி சாலை மார்க்கமாக வந்த முதல்வர், மல்லூர், ராசிபுரம், புதுச்சத்திரம், புதன்சந்தை பகுதியில் சாலையோரம் நின்றிருந்த பொதுமக்களை சந்தித்து முதல்வர் கலந்துரையாடினார். நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ. வேலு, ரா. ராஜேந்திரன், மா. மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார், மக்களவை உறுப்பினர் வி.எஸ். மாதேஸ்வரன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஈ.ஆர். ஈஸ்வரன், பெ. ராமலிங்கம், கே. பொன்னுசாமி மற்றும் தொகுதிப் பார்வை யாளர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.