districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

பெண்களை செல்போனில் புகைப்படம் எடுத்த காவலர் பணியிடை நீக்கம்

கோவை, அக்.22- பெண்களை செல்போனில் புகைப்படம் எடுத்த காவ லர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கோவை மாவட்டம், சாய்பாபா காலனி காவல் நிலை யத்தில் காவலராக பணியாற்றி வருபவர் பாலமுருகன். இவர் சாய்பாபா காலனியில் உள்ள ஒரு பேக்கரிக்கு டீ குடிக்க சென்றார். அப்பொழுது அவர் அங்கு டீ குடித்துக் கொண்டு  இருந்த பெண்களை தனது செல்போனில் புகைப்படம் எடுத்த தாக தெரிகிறது. இது குறித்து அங்கு இருந்தவர்கள் கேட்ட போது, ஆத்திரமடைந்த பாலமுருகன் அவர்களை தள்ளி விட்டு தப்பி ஓட முயன்றார். உடனே அக்கம், பக்கத்தினர் விரைந்து சென்று பாலமுருகனை பிடித்து, சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவலர் பால முருகனின் செல்போனை காவல் துறையினர் ஆய்வு செய்த  போது பெண்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், அவரி டம் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி காவல் ஆணையா ளர் பாலகிருஷ்ணனிடம் அறிக்கை அளித்தனர். இதையடுத்து பாலமுருகனை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

சாலையில் தேங்கும் மழைநீர்

நாமக்கல், அக்.22- ஜேடர்பாளையம் அருகே சாலையில் தேங்கும் மழை நீரால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம் அருகே உள்ள  தெற்கு தொட்டிபாளையத்திலுள்ள சாலையில் மழைநீர் வெள்ளம்போல தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி பொது மக்கள் சாலையைக் கடந்து செல்லமுடியாமல் அவதிய டைந்து வருகின்றனர். எனவே, பெரும் மழை பெய்து மழைநீர் வீடுகளுக்கு புகுவதற்கு முன், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மழைநீரால் பாதிப்படையும் ஹவுசிங் யூனிட்

கோவை, அக்.22- அம்மன்குளம் பகுதியில் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் மழை நீர் தேங்கி குடியிருப்புகள் சேதமடைந்து, வருவதை உடனடியான சரி செய்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மன்குளம் பகுதியில் அரசு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு அடுக்குமாடி கட்டிடத்தின் மாடியில் செடிகள் புற்கள் முளைத்து இருப்பதால் மழைநீர் தேங்கி கட்டிடம் முழுவதும் ஓதமாகி உள்ளது. வீடுகளுக்கு உட்புறத்திலும் ஓதமாகி வருகிறது. மேலும், சுவர்களின் பல்வேறு இடங்களில் பாசிகள் படிந்து சுவர்களில் மின்சாரம் (எர்த்) பாய்ந்து வருகிறது.மேல் தளத்தில் இருக்கின்ற வீடுகளுக்கு முன்பு மழை வரும் போதெல்லாம் மழை நீர் வீட்டின் முன்பு தேங்கி விடுகிறது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடும் என அச்சம் நிலவுகிறது. வீடுகளுக்கு உள்ளும் வெளியிலும் சுவர்களில் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் பாய்வதால் குழந்தைகளை வைத்து கொண்டு அச்சத்திலேயே இருக்கிறோம். உடனடியாக இதனை சரி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கார் மோதி ஊராட்சி மன்றத் தலைவர் பலி

தருமபுரி, அக்.22- அரூர் அருகே இருசக்கர  வாகனம் மீது கார் மோதிய தில், ஊராட்சி மன்றத் தலை வர் உயிரிழந்தார். தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள எல்லப்புடை யாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் மாரியப்பன் (65).  இவர் திங்களன்று தருமபுரி  ஆட்சியர் அலுவலகத்திற்கு, பணி நிமித்தமாக சென்று  விட்டு, தனது இருசக்கர வாக னத்தில் அரூருக்கு சென்று கொண்டிருந்தார். தருமபுரி -  அரூர் சாலை, ஒடசல்பட்டி கூட்ரோடு அருகே வந்த போது, மொரப்பூரிலிருந்து தருமபுரி நோக்கி சென்ற கார், மாரியப்பனின் இருசக் கர வாகனம் மீது மோதியது.  இதில் பலத்த காயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு, தருமபுரி அரசு மருத் துவமனைக்கு சிகிச்சைக் காக அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி  திங்களன்று மாலை மாரியப் பன் உயிரிழந்தார்.

மாற்றுத்திறனாளி அலைக்கழிப்பு: ஆட்சியரிடம் புகார்

உதகை, அக்.22- பார்வை இழந்த மாற்றுத்திறனாளிக்கு உதவித்தொகை வழங்க அலைக்கழிக்கப் பட்டதால், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி செவ்வா யன்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.  நீலகிரி மாவட்டம், உதகை அடுத்த முத் தோரை லீஸ் பகுதியைச் சேர்ந்தவர்  நாகராஜ்  (35). 100 சதவீதம் பார்வை இழந்த மாற்றுத்திற னாளியான இவர், உதகை அரசு கல்லூரியில்  பிஏ ஆங்கிலம் படித்தார். 100 சதவீத பார்வை யில்லாததால் வேறு வேலைக்கு ஏதுவும் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால், வேலைவாய்ப்பு அலுவலகத்தால் வழங்கப் படும் மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்பற் றோர் உதவித்தொகைக்கு விண்ணப்பித்து  கடந்த 10 ஆண்டுகளாக மாதந்தோறும் உதவித் தொகை பெற்று வந்தார். இந்நிலையில், வரு வாய்த்துறையால் மாதந்தோறும் மாற்றுத்திற னாளிகளுக்கு வழங்கப்படும் ரூ.1500 உதவித் தொகை பெற ஆன்லைன் மூலம் கடந்த ஒன் றரை ஆண்டுக்கு முன்பு விண்ணப்பித்தார். அப்போது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து உதவித்தொகை பெறுவதால், வரு வாய்த்துறை மூலம் உதவித்தொகை வழங்க இயலாது, எனவே வேலை வாய்ப்பு அலுவ லகத்தில் உதவி தொகை ரத்து செய்து சான்றி தழ் பெற்று வருமாறு தாசில்தார் அலுவ லகத்தில் தெரிவிக்கப்பட்டது.  இதனால், வேலை வாய்ப்பு அலுவலகத் தில் வாங்கி வந்த உதவித்தொகையை ரத்து  செய்து நாகராஜ் சான்றிதழ் வாங்கி தாசில் தார் அலுவலகத்தில் சமர்ப்பித்தார். ஆனால்,  அதன் பின்னரும் பல காரணங்களை கூறி அவ ருடைய மனு நிலுவையில் இருப்பதாக கூறி அவர் அலைக்கழிக்கப்பட்டார். ஒரு கட்டத் தில் மனுதாரருக்கு உழைக்கும் திறன் உள் ளது என காரணம் கூறி அவருடைய மனு முழு வதுமாக நிராகரிக்கப்பட்டது. இதனால்  அதிர்ச் சியடைந்த நாகராஜ் தனது தாயுடன் வந்து ஆட்சியர் அலுவலகத்தில், நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்தார்.

பூங்கா நுழைவுக் கட்டணம் அதிகரிப்பு

உதகை, அக்.22- உதகையில் உள்ள தோட்டக்கலைத்துறை பூங்காவில் நுழைவுக் கட்டணம் இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், உதகை அருகே ஃபெர்ன்ஹில் பகுதி யில் 30 ஏக்கர் பரப்பில், கர்நாடகா அரசு தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான பூங்கா உள்ளது. இந்த பூங்காவிற்கு  சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. இதற்கிடையே, உதகை தாவரவியல் பூங்காவில் நுழைவுக் கட்டணம் உயர்த்தப்பட்டதால், கர்நாடகா பூங்காவுக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை மேலும் அதிகரித்தது. இந்நி லையில், கர்நாடகா அரசு தோட்டக்கலை துறை பூங்காவில் பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு ரூ.25 என நுழை வுக் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், திங்க ளன்று முதல் பெரியவர்களுக்கு ரூ. 100, சிறியவர்களுக்கு ரூ.50 என இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர். இதுகுறித்து தோட்டக் கலை துறை உதவி இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி கூறியதா வது, “பூங்கா நுழைவுக் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டு 3  ஆண்டுகளான நிலையில், கர்நாடகா தோட்டக்கலை துறை  செயலர் ஆய்வு செய்து அறிவுறுத்தல்படி நுழைவுக் கட்ட ணம் உயர்த்தப்பட்டுள்ளது, என்றார்.

நொய்யல் ஆற்றில் கழிவுநீரை விடுவதால் புற்றுநோய் ஏற்படுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

திருப்பூர், அக்.22- நொய்யல் ஆற்றில் கழிவுநீரை விடு வதால், கோவை, திருப்பூர், ஈரோடு  உள்ளிட்ட மாவட்டங்களில் புற்றுநோய் அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. எனவே மாவட்ட  ஆட்சியர்கள் உடனடியாக நடவடிக்கை  எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந் துள்ளது.  நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.எஸ். திருஞானசம்பந்தம் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, கோவையில் இருந்து வரும் நொய்யல்  ஆற்றில் அடுக்குமாடி குடியிருப்பு கழி வுகள், உள்ளாட்சி அமைப்புகளுடைய கழிவுநீர் நொய்யல் ஆற்றில் விடுவ தால் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர்  வரை விவசாய விளைநிலம் மண்ணின்  தன்மை கெட்டுவிட்டது. நீர் ஆதாரம் மாசு அடைந்து விவசாயிகள், கால்நடை கள் மற்றும் பொதுமக்கள் வாழ்வாதா ரம் இழந்து, கொடிய புற்றுநோய் தாக்கு தலுக்கு உள்ளாகி உயிரிழப்புகள் ஏற்ப டுவது பற்றி ஆய்வறிக்கை வெளியி டப்பட்டுள்ளது. பொது சுகாதார நிபுணர் கள் நொய்யலில் புற்றுநோய் ஏற்ப டுத்தும் ரசாயனங்கள் இருப்பது பற்றி யும், கோவை திருப்பூர் ஈரோட்டில் புற்று நோய் அதிகரிப்பது பற்றியும் ஒப்பிட்டு ஆய்வறிக்கைகள் வெளியிட்டுள்ளனர். இவற்றில் குறிப்பாக கார்சினோ ஜேன்ஸ் எனப்படும் புற்றுநோய் ஏற்ப டுத்தும் ரசாயனங்கள் நொய்யல் படுகை யில் அதிக அளவு இருப்பதாக அதிர்ச்சி கரமான விபரம் தெரியவந்துள்ளது.  கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2022  ஆம் ஆண்டு வரை அடுத்தடுத்து தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வுகளில், இந்த ரசாயன கலவை இருப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட் டில் மற்ற மாவட்டங்களை விட கோவை,  திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் புற்று நோய் பாதிப்பு அபாய கட்டத்தை எட்டி யுள்ளது எனவும் தெரியவந்துள்ளது. தொழிற்சாலைகள் முறையாக சுத்தி கரிப்பு செய்யாதது, ஆற்றிலும் நீர் நிலை களிலும் கழிவுநீர் விடுவதால் காலரா,  வயிற்றுப்போக்கு நோய்களும் ஏற்படு கிறது. தண்ணீர் மாசுபாட்டிற்கும், புற்று நோய் தாக்கத்திற்கும் உள்ள தொடர்பை ஒப்பிட்டுப் பார்த்தபோது, கோவையில் 7.7 சதவீதம் பேர் ப்ராஸ் டேட் புற்றுநோயிலும், 6.9% நுரையீரல் புற்றுநோயினாலும், 6.7 சதவீதம் பேர் கல்லீரல் புற்று நோயினாலும், 3.9% சிறுநீரகப் புற்றுநோயினாலும் 3.1 பேர்  இரைப்பை புற்றுநோயினாலும் பாதிக் கப்பட்டுள்ளனர். அது போல திருப்பூ ரில் 3.2 சதவீதம் பேர் நுரையீரல் புற்று நோயிலும், 2.9 சதவீதம் பாஸ்ட்டேட் புற்றுநோயினாலும், 2.9 சதவீதம் பேர்  சிறுநீரக புற்றுநோயினாலும், 1.6 சதவீதம்  பேர் இரைப்பை புற்றுநோயினாலும் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.  மேலும், கோவையில் இருந்து திருப் பூர் வரை உள்ள நொய்யல் தென்புறம் வடப்புரம் இரண்டு கிலோமீட்டர் தூரம் உள்ள விவசாயப் பூமிகள், தென்னை மரங்கள், கால்நடைகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. விவ சாயிகளுக்கு வருவாய் துறை மூலம் கணக்கீடு செய்து சிறப்பு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் வகை யில் இயங்கி வரும் தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், நகை பட்டறை தொழிற்சாலைகள், அடுக்குமாடி குடி யிருப்பு பகுதிகளை ஆய்வு செய்து நட வடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், பொது சுகாதாரத்துறை, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட ஆட்சியாளர்கள் முனைப்போடு செயல்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.