districts

img

அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட மாநாடு

கோவை, அக்.22- அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை ஓய்வூதிய மாக ரூ.7,850 வழங்க வேண்டும் என அங் கன்வாடி ஓய்வூதியர் சங்க கோவை மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அனைத்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க  கோவை மாவட்ட மாநாடு தாமஸ் கிளப் பில் மாவட்ட கன்வீனர் ஆர்.இராஜகோ பால் தலைமையில் செவ்வாயன்று நடைபெற்றது. துணை கன்வீனர் எஸ்.சாரதாமணி வரவேற்றார். தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.மதன் துவக்க வுரையாற்றினார். இதில், சத்துணவு மற் றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை ஓய்வூதியம் ரூ.7850-ம் அகவிலைப்படி, மருத்துவப் படி வீட்டு வாடகைப்படி மற்றும் மருத் துவ காப்பீடு திட்டம் அமல்படுத்த வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதில், தமிழ்நாடு அனைத்து துறை  ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் கே. அருணகிரி உள்ளிட்ட தோழமை சங்க நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர்.  தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில துணைத்தலைவர் என்.அரங்கநாதன் சிறப்புரையாற்றினார். இதனை தொடர்ந்து, மாவட்டத் தலை வராக கே.என்.ராமசாமி, மாவட்டச் செய லாளர் ஆர். ராஜகோபால், பொருளாள ராக எஸ். சாரதாமணி உள்ளிட்ட 12  பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்ந் தெடுக்கப்பட்டது. இறுதியாக, தமிழ் நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநிலத் தலைவர் கே.பழனிசாமி நிறைவுரையாற்றினார். துணை கன்வீனர் என். சாரதா நன்றி கூறினார்.