districts

img

குளமாக மாறிய உடுமலை போக்குவரத்து பணிமனை அசம்பாவிதம் நிகழ்வதற்குள் நடவடிக்கை எடுக்க சிஐடியு கோரிக்கை

உடுமலை, அக்.22 - உடுமலை போக்குவரத்து பணிமனை அலுவலகம் முழுவதும்  மழைநீர் சாக்கடை நீருடன் கலந்துள் ளது. இதனால் தொழிலாளர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்ப டுள்ளது எனவே உடனடியாக நடவ டிக்கை எடுக்க சிஐடியு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிஐடியு போக்குவ ரத்து தொழிலாளர் சங்கத்தினர் போக்கு வரத்து கிளை மேலாளர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ள மனு வில் கூறியிருப்பதாவது, உடுமலை போக்குவரத்து கிளை அலுவலகத்தில் தொழிலாளர்கள் ஓய்வு எடுக்கவும், பழு தான பேருந்துகளை சரி செய்ய மற்றும்  அனைத்து பேருந்துகளும் நிறுத்தும் இடமாக இருக்கும் பணிமனை வளா கத்தில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழை யால் நீர் சூழ்ந்தது. மேலும், இப்பகு தியில் இருக்கும்  சாக்கடை நீருடன் மழை நீர் கலந்து வளாகம் முழுவதும் குளம் போல் காட்சி அளித்தது. தொழி லாளர்களுக்கு நோய் தொற்று ஏற்படும்  முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறப்பட்டுள்ளது.  இது குறித்து சிஐடியு நிர்வாகிகள் தெரிவிக்கையில், உடுமலை நகருக் குள் பாதாள சாக்கடை பணி முடித்து பல  வருடங்களாகியும், போக்குவரத்து கிளையில் இருந்து தண்ணீர் வெளியே  செல்வதற்கு வழியில்லை. இதனால் மழை காலங்களிலும் சரி,  வெயில் காலங்களிலும் சரி இதே  நிலைதான். கூடுதலாக மழை காலங்க ளில்  மழை நீருடன் சாக்கடை நீர் கலந்து  கிளை வளாகம் முழுவதும் நிற்கும்.  இத னால் டெங்கு, மலேரியா உற்பத்தி ஆவ தற்கு அதிக வாய்ப்பு உள்ளது. பாதாள  சாக்கடை பணி முடித்த பிறகு, உடு மலை கிளைக்கு ஒரு சில கிளை மேலா ளர்கள் வந்தும் ஆக்கப்பூர்வமான பணி களை மேற்கொள்ளவில்லை என்பது தான் வேதனையாக உள்ளது. இப் போது பிரச்சனை சாக்கடைக்கு அரு கிலேயே தொழிலாளர்களின் ஓய்வறை இருப்பதால், இரவில் கொசுக்கடி  அதி கம். கடுமையான துர்நாற்றம் வீசுவ தால் தொழிலாளர்களுக்கு உடல்ரீதி யாகவும், மனரீதியாகவும் பிரச்சனை  ஏற்படுகிறது என்றார்கள். போக்குவ ரத்து பணிமனையில் உள்ள பிரச்ச னைகள் குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாகக் கூறினர்.