districts

img

குண்டும், குழியுமாக, அச்சுறுத்தும் மங்கலம் சாலை

திருப்பூர், அக்.22 - கருவம்பாளையத்தில் இருந்து பழகு டோன் வரை படுமோசமாக உள்ள சாலை யைச் சீரமைக்காமல் காலம் தாழ்த்தி வரும் நெடுஞ்சாலை துறை மற்றும் மாநகராட்சி நிர் வாகத்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கருவம்பாளையம் பகுதி  கிளைகள் சார்பில் செவ்வாயன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  பிரதான சாலையாக உள்ள மங்களம் சாலை, கருவம்பாளையத்தில் இருந்து பழ  குடோன் வரை குடிநீர் குழாய் பதிப்பதற்காக  குழிகள் தோண்டப்பட்டது. ஆனால் பல  மாதங்கள் ஆகியும் இன்னும் சீரமைக்கப்படா மல் குண்டும் குழியுமாக அச்சுறுத்திக் கொண் டிருக்கிறது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக் கவில்லை. மழைக்காலங்களில் மழைநீரு டன் சாக்கடை கழிவுநீர் கலந்து, சாலை முழுவ தும் ஆறு போல் ஓடுகிறது. மங்கலம் வழியாக  சோமனூர்,  சாமளாபுரம், கோவைக்கு தினசரி  ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் இந்த முக்கிய சாலை இப்படி இருப் பது கவலை அளிக்கிறது. இனி வரும் காலம்,  மழைக்காலம் என்பதாலும், பண்டிகை காலம்  என்பதாலும் போக்குவரத்து நெரிசல் அதி கமாக ஏற்படும். எனவே உடனடியாக சாலை யைச் சீரமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத் துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் தெரிவித்தனர். முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கருவம் பாளையம் எ கிளை செயலாளர் பி.கோபால்  தலைமை வகித்தார். மாநகரச் செயலாளர் டி. ஜெயபால், மாநகரக்குழு உறுப்பினர்கள் சுரேஷ், ஞானசேகர், சாலையோர வியாபாரி கள் சங்க செயலாளர் பி.பாலன் உள்ளிட் டோர் பேசினர்.  பொதுமக்கள் பலர் பங்கேற்று  கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.