மாதர் சங்க மாநாடு எழுச்சித் துவக்கம்
ஹைதராபாத்தில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் மாபெரும் பேரணி
ஹைதராபாத், ஜன. 25- அநீதிக்கு எதிராகவும், சமத்துவத்திற்காகவும் ஓங்கி ஒலிக்கும் பெண்களின் குரல்களால் ஹைதராபாத் நகரம் அதிர்ந்தது. நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் பரவிக்கிடக்கும் கோடிக்கணக்கான உழைக்கும் பெண்களின் நம்பிக்கையான அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 14-வது தேசிய மாநாடு, ஒரு வர லாற்றுப் பெருமிதத்துடன் தெலுங்கு மண்ணில் தொடங்கியுள்ளது. சரோஜினி பாலானந்தன் நகரில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பெண்ணுரிமைப் போராளிகளின் விண்ணதிரும் முழக்கங்களுக்கு இடையே, அகில இந்திய தலைவர் பி.கே. ஸ்ரீமதி அமைப்பின் வெண் கொடியை ஏற்றி வைத்தார். அந்த கொடி காற்றில் படபடத்தபோது, அது வெறும் துணியல்ல; பல தலை முறைப் பெண்களின் கண்ணீரும் செந்நீரும் கலந்த போராட்டத்தின் அடையாளம் என்பதை உணர்த்தி யது. மூத்த தலைவர் பிருந்தா காரத் தலைமையில் தியாகி களுக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தியபோது, அப்பகுதியே ஒரு நிமிடம் அமைதியில் உறைந்தது. மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய திரைக் கலைஞர் ரோகிணியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஆணாதிக்கச் சமூகத்தின் மீதும், மதவாத அரசிய லின் மீதும் சவுக்கடியாக விழுந்தன. “இன்று நாம் நிமிர்ந்து நின்று பேசும் இந்த மேடை, நமக்கு முன்னால் களம் கண்ட வீரப் பெண்களின் போராட்டத்தால் விளைந்தது. ஒடுக்குமுறைகள் தொடரும் வரை நம் போராட்டங்களும் ஓயாது” என்று அவர் முழங்கியபோது பிரதிநிதிகளின் கரவொலி அடங்க நீண்ட நேரம் பிடித்தது. இந்த மாநாடு வெறும் பேச்சு களுக்கானது மட்டுமல்ல; சாதனை களைக் கொண்டாடுவதற்கானது என்பதையும் நிரூபித்தது. தமிழ்நாடு, புதுச்சேரி, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் களப்பணி ஆற்றிய வீராங்கனைகளும், விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த தெலுங்கானாவின் மகள் மிஹாவும் கௌரவிக்கப்பட்ட நிகழ்வு, அடுத்த தலைமுறைக்கு பெரும் ஊக்கத்தை அளித்தது. மாபெரும் பேரணி பிற்பகலில் ஹைதராபாத் வீதிகள் சிவப்புக் கடலாக மாறியது. 26 மாநிலங்களிலிருந்து வந்தி ருந்த 850-க்கும் மேற்பட்ட பிரதிநிதி களுடன் தெலுங்கானா மாநிலம் முழுவதும் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பெண்கள் அணிவகுத்த அந்தப் பேரணி, ஆதிக்க சக்திகளுக்கான எச்சரிக்கையாக அமைந்தது. பெண்களின் பாதுகாப்பு, உரிமை மற்றும் சமத்துவத்திற்கான இந்த மாநாடு நான்கு நாட்களுக்குத் தொடர்ந்து விவாதிக்கப்பட வுள்ளது.ஹைதராபாத், ஜன. 25- அநீதிக்கு எதிராகவும், சமத்துவத்திற்காகவும் ஓங்கி ஒலிக்கும் பெண்களின் குரல்களால் ஹைதராபாத் நகரம் அதிர்ந்தது. நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் பரவிக்கிடக்கும் கோடிக்கணக்கான உழைக்கும் பெண்களின் நம்பிக்கையான அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 14-வது தேசிய மாநாடு, ஒரு வர லாற்றுப் பெருமிதத்துடன் தெலுங்கு மண்ணில் தொடங்கியுள்ளது. சரோஜினி பாலானந்தன் நகரில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பெண்ணுரிமைப் போராளிகளின் விண்ணதிரும் முழக்கங்களுக்கு இடையே, அகில இந்திய தலைவர் பி.கே. ஸ்ரீமதி அமைப்பின் வெண் கொடியை ஏற்றி வைத்தார். அந்த கொடி காற்றில் படபடத்தபோது, அது வெறும் துணியல்ல; பல தலை முறைப் பெண்களின் கண்ணீரும் செந்நீரும் கலந்த போராட்டத்தின் அடையாளம் என்பதை உணர்த்தி யது. மூத்த தலைவர் பிருந்தா காரத் தலைமையில் தியாகி களுக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தியபோது, அப்பகுதியே ஒரு நிமிடம் அமைதியில் உறைந்தது. மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய திரைக் கலைஞர் ரோகிணியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஆணாதிக்கச் சமூகத்தின் மீதும், மதவாத அரசிய லின் மீதும் சவுக்கடியாக விழுந்தன. “இன்று நாம் நிமிர்ந்து நின்று பேசும் இந்த மேடை, நமக்கு முன்னால் களம் கண்ட வீரப் பெண்களின் போராட்டத்தால் விளைந்தது. ஒடுக்குமுறைகள் தொடரும் வரை நம் போராட்டங்களும் ஓயாது” என்று அவர் முழங்கியபோது பிரதிநிதிகளின் கரவொலி அடங்க நீண்ட நேரம் பிடித்தது. இந்த மாநாடு வெறும் பேச்சு களுக்கானது மட்டுமல்ல; சாதனை களைக் கொண்டாடுவதற்கானது என்பதையும் நிரூபித்தது. தமிழ்நாடு, புதுச்சேரி, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் களப்பணி ஆற்றிய வீராங்கனைகளும், விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த தெலுங்கானாவின் மகள் மிஹாவும் கௌரவிக்கப்பட்ட நிகழ்வு, அடுத்த தலைமுறைக்கு பெரும் ஊக்கத்தை அளித்தது. மாபெரும் பேரணி பிற்பகலில் ஹைதராபாத் வீதிகள் சிவப்புக் கடலாக மாறியது. 26 மாநிலங்களிலிருந்து வந்தி ருந்த 850-க்கும் மேற்பட்ட பிரதிநிதி களுடன் தெலுங்கானா மாநிலம் முழுவதும் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பெண்கள் அணிவகுத்த அந்தப் பேரணி, ஆதிக்க சக்திகளுக்கான எச்சரிக்கையாக அமைந்தது. பெண்களின் பாதுகாப்பு, உரிமை மற்றும் சமத்துவத்திற்கான இந்த மாநாடு நான்கு நாட்களுக்குத் தொடர்ந்து விவாதிக்கப்பட வுள்ளது.
