tamilnadu

ஜன.20-இல்  சட்டமன்றம் கூடுகிறது பேரவைத் தலைவர் தகவல்

ஜன.20-இல்  சட்டமன்றம் கூடுகிறது பேரவைத் தலைவர் தகவல்

சென்னை, டிச.26 - 2026 ஆம் ஆண்டின் முதல் சட்டப் பேரவை கூட்டத் தொடர் ஜனவரி 20 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குவதாக பேரவைத் தலை வர் அப்பாவு அறிவித்துள்ளார். ஆளுநர் ஒப்புதலுடன் ஜனவரி 20 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடும். அன்றைய தினமே தமிழக முதலமைச்சர், அமைச்சர்களால் தயாரிக்கப்பட்ட உரையை ஆளுநர் ஆர்.என். ரவி  வாசிப்பார். அன்று காலை அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறும் என்றும், ஏற்கனவே பின்பற்றப்படும் அவை மரபுபடி தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து ஆளுநர் உரை இடம்பெறும் என்றும் பேர வைத் தலைவர் அப்பாவு செய்தி யாளர்களிடம் தெரிவித்தார். செய்தி யாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த பேரவை தலைவர், “தமிழ்நாடு அரசு தயாரிக்கும் உரை யை ஆளுநர் முழுமையாக வாசிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது” என்று கூறினார்.