மதுரை, டிச. 25 - மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிராக கிராம மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அர சியல் கட்சிகள் நடத்திய போராட்டம் நடத்தி வருகின்றனர். சட்டமன்றத்தில் தமிழக அரசும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. எனினும், ஏலத்தை ரத்து செய்யாத ஒன்றிய அரசு பாஜக அரசு, ‘நாயக்கர் பட்டி தொகுதிக்குட்பட்ட பகுதிக்குள் பல்லுயிர் பாரம்பரியத் தலம் உள் ளது என்ற அடிப்படையில் இந்த பகுதி யை ஏலம் விடுவதற்கு எதிராக பல் வேறு கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன. எனவே, டங்ஸ்டன் சுரங்கத்திற்காக, இப்பகுதியை தேர்வு செய்துள்ள இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் தமது முடிவை மறுபரிசீலனை செய்து, உயிரியியல் பன்முகத் தன்மை வாய்ந்த பகுதிகளை அத்தொகுதியி லிருந்து விலக்கி, இத்திட்டத்தை மறு வரையறை செய்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்யுமாறு கோரியுள்ளோம். மேலும் நாயக்கர்பட்டி டங்ஸ்டன் தொகுதியை ஏலம் எடுக்க விருப்பம் தெரிவித்துள்ள நிறுவனத்திற்கு ஒப்பந்தக் கடிதம் வழங்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் தமிழக அரசுக்கு ஒன்றிய அரசு கோரிக்கை விடுத்துள்ளோம்’ என அறிவித்துள்ளது. இந்நிலையில், இது மீண்டும் மக்க ளை ஏமாற்றும் முயற்சி என்று மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கண்டனம் தெரி வித்துள்ளார்.
“தமிழக அரசு அரிட்டாபட்டி மற்றும் மீனாட்சிபுரம் கிராமங்களில் உள்ள சுமார் 193.215 ஹெக்டேர் நிலப் பகுதியை மட்டுமே பல்லுயிர் கலாச்சார பகுதியாக அறிவித்துள் ளது. அந்த வகையில், ஒன்றிய அர சின் கனிமவள அமைச்சகமானது, உயிர்பன்மையம் சார்ந்த பகுதி களைத் தவிர்த்து மீதம் உள்ள பகுதி யில் டங்ஸ்டன் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆராய வேண்டும் என்று கூறியுள்ளது. இதன்மூலம் உயிர்ப்பன்மைய பகுதியைத் தவிர்த்து மீதம் உள்ள 1800 ஹெக்டேர் அளவிலான நிலப்பகுதியில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றே கூறியுள்ளது. வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த புராதனச் சின்னங்களை பாதுகாக்கும் அறிவிப்பும் இல்லை. பல்லுயிர் பாதுகாப்புப் பகுதியைத் தவிர்த்து மீதம் உள்ள பகுதியில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்த பகுதிக்கும் நிச்சயம் பாதிப்பு இருக்கும். எனவே இத்திட்டத்தை முழுமையாக கைவிடுவதே சூழலை பாதுகாக்கும். அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்தை மொத்தமாக கைவிட வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு சட்ட மன்றம் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானம். பாதுகாக்கப்பட்ட பகுதியில் வரக்கூடிய சுரங்கத்தை மட்டும் கைவிடுவது நோக்கமல்ல. இது எங்கள் வாழ்வு, வரலாறு மற்றும் வளத்தை காக்க நடக்கும் போராட்டம். எனவே, 8 கோடி தமிழ் மக்களின் உணர்வுகளை புறந்தள்ளி, ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ள சூழ்ச்சி மிகுந்த திட்டத்தை மக்கள் முறி யடிப்பார்கள். ஒன்றிய அரசு டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை மக்கள் போராட்டம் தொடரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.