tamilnadu

img

வேற்றுமையை கிள்ளி எறிய வள்ளுவரே மருந்து

சென்னை, டிச. 25 - சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள பாறையில் திருவள்ளு வர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் ஆகின்றன. இதனையொட்டி அரசு சார்பில் டிசம்பர் 30, 31 மற்றும் 2025 ஜனவரி 1 ஆகிய தேதிகளில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது. இதில், முதல் 2 நாட்கள் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார். அப்போது திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் இடையே அமைக்கப்பட்டு வரும் கண்ணாடிக் கூண்டு பாலத்தை முத லமைச்சர் திறந்து வைக்கிறார். அதனடிப்படையில், திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமது ‘எக்ஸ்’ பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: “வள்ளுவ முனைதனில் வானுயர நிற்கும் பேரறிவுச் சிலையின் வெள்ளி விழாக் கொண்டாட்டங்களில் ஆர்வமுடன் பங்கெடுக்கும் இளைய தலைமுறை, அய்யன் வள்ளுவர் வகுத்துள்ள தமிழ் வாழ்வியல் நெறியை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதில் மகிழ்கிறேன். வள்ளு வம் போற்றுதும். வள்ளுவம் என்பது வாழ்வியல் நெறியாக மாற வேண்டும். சமுதாயம், குறள் சமுதாயமாக மலர வேண்டும். வேற்றுமையின் வேர்களைக் கிள்ளி எறிய வள்ளுவ மருந்தே பொது மருந்தாக மாற வேண்டும். வாழிய குறளும், வள்ளுவன் புகழும், வாழிய வாழியவே...” என்று தெரிவித்துள்ளார்.