tamilnadu

img

ரயில் பயணச்சலுகையை திருப்பித் தந்த மூத்த குடிமக்கள் 63 லட்சம் பேர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்?

சு.வெங்கடேசன் எம்.பி., கேள்வி-ஒன்றிய அமைச்சர் பதிலளிக்க வலியுறுத்தல்

புதுதில்லி, டிச.25- ரயில் பயணச்சலுகையை திருப்பித் தந்த மூத்த குடிமக்கள் 63  லட்சம் பேர் எந்த நாட்டைச் சேர்ந்த வர்கள் என்ற விபரத்தை ஒன்றிய ரயில்வே அமைச்சகம் தெரிவிக்க வேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: நாடாளுமன்றத்தில் 2021 - 2024 மற்றும் 2025 நிதியாண்டின் அக்டோ பர் வரையிலான காலகட்டத்தில் எத்த னை முறை மூத்த குடிமக்கள் ரயிலில்  பயணம் செய்துள்ளார்கள், மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டணச் சலுகையை திரும்பப் பெற்றதன் மூலம் இதே காலகட்டத்தில் ஒன்றிய அரசுக்கு எவ்வளவு தொகை சேமிப்பாக கிடைத்துள்ளது என்ற கேள்வியை (231/13.12.2024) எழுப்பினேன். இதற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்துள் ளார்.  அந்த பதிலில், மூத்த குடிமக்கள் எத்தனை முறை பயணம் செய்துள் ளார்கள் என்ற விவரம் தரப்பட வில்லை. மாறாக 2021 நிதியாண்டில் துவங்கி 2024 அக்டோபர் வரை மொத்த  பயணிகள் 2230 கோடி  முறை பயணித்துள்ளனர் என்றும் 2022 - 23 ஆம் ஆண்டில் பயணி களின் கட்டண சலுகையாக 57 ஆயி ரம் கோடி ரூபாய் தரப்பட்டுள்ள தாகவும் குறிப்பிட்டுள்ளார். இது  சராசரியாக ரயில்வே கட்டணத்தில் 46 சதவீதம் என்றும் தெரிவித்துள் ளார்.  கேள்வியின் நோக்கமே மூத்த  குடிமக்கள் செய்கிற ரயில் பயணங் களின் விவரங்களை பெறுவதும், கோவிட் காரணத்தை பயன்படுத்தி திரும்பப் பெறப்பட்ட மூத்த குடிமக்க ளின் ரயில் கட்டண சலுகைகளின் காரணமாக எவ்வளவு தொகை அரசுக்கு மிச்சமாகி இருக்கிறது என்பதை அறிவதற்குத்தான்.

கேள்விக்கு பதிலளிக்காத அமைச்சர்

ஆனால் அமைச்சரோ வேண்டு மென்றே அந்தக் கேள்விக்கு பதில் அளிக்காமல் மொத்த பயணிகள் எவ்வளவு, மொத்த மானியம் எவ்வ ளவு என்று கணக்குத் தந்துள்ளார். எல்லோருக்குமான மானியத்தைக் கடந்துதான் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு கட்டணச் சலுகை வழங்கப் பட்டு வந்தது. ஆகவே அரசு இந்த கேள்விக்கான பதிலை தவிர்ப்பதன் மூலம் மூத்த குடிமக்களின் கட்டணச்  சலுகை ரத்தானதால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு எவ்வளவு என்கிற தகவலை மறைத்துள்ளது.  சீப்பை ஒளித்து வைத்து கல்யாணத்தை நிறுத்த முடியாது; மூத்த குடிமக்கள் சம்பந்தமான தக வலை மறைப்பதன் மூலம் அவர் களின் கோபத்தையும் வடித்து விட முடியாது.  அதே நேரம்,  இம்மாதம் வெளி வந்துள்ள ஒன்றிய அரசின் “நியூ இந்தியா சமாச்சார்” இதழில் மூத்த  குடிமக்கள் 63 லட்சத்துக்கும் மேற் பட்டோர் தாங்களாகவே முன் வந்து ரயில் பயணசலுகையை விட்டுக்  கொடுத்துள்ளனர் என்று கூறியுள்ளனர்.  மூத்த குடிமக்கள் எத்தனை முறை பயணம் செய்தனர் என்பதையே தர மறுக்கிற இரயில்வே அமைச்சகம், பயணச்சலுகையை திருப்பித் தந்தவர்களின் விபரத்தை எங்கிருந்து எடுத்தது? அதுமட்டுமல்ல, பறிக்கப்பட்ட தை எப்படி விட்டுக்கொடுக்க முடியும்? இந்த 63 லட்சம் பேர் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற விபரத்தை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள் ளார்.