tamilnadu

img

அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த கொடுமை

சென்னை,டிச.25- சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவிக்கு  பாலி யல் வன்கொடுமை நிகழ்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார். சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் ஒரு மாணவரும், மாணவியும் செவ்வாய்க்கிழமை (டிச.24) இரவு நெடுஞ்சாலை ஆய்வகத்தின் பின்புறம் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த அடை யாளம் தெரியாத 2 பேர் மாணவரை அடித்து துரத்திவிட்டு, மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளனர். இதுகுறித்து அந்த மாணவி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை யடுத்து கோட்டூர்புரம் உதவி ஆணை யர் பாரதிராஜன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.  புகாரளித்த மாணவியிடமும் பெண் காவல் அதிகாரிகள் விசார ணை நடத்தினர். இச்சம்பவத்தில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். 4 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் இச்சம்பவத்தில் ஞானசேகரன் (37) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றத்தை ஒப்புக்கொண்டு ஞான சேகரன் வாக்குமூலம் அளித்துள்ள தாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தை அடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அடையாள அட்டை பரிசோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். 

பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை: பல்கலை.

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இச்சம்பவம் குறித்து அண்ணா  பல்கலைக்கழக உள் புகார் குழுவின ருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள் ளது. அந்த குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர். காவல்துறையினரின் விசார ணைக்கு முழு ஒத்துமைப்பு வழங்க  வேண்டும் என்று உயர் கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதன் அடிப்படையில் பல்கலைக் கழக நிர்வாகம் காவல்துறையினர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. மாணவியின் புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற சம்பவங்கள் இனி  நடைபெறாமல் இருக்க பாது காப்பை மேலும் பலப்படுத்த நட வடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார். பல்கலை. வளா கத்தில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு பாதுகாப்பு அலுவலர் கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையும், பல்கலை. பாதுகாப்பு அதிகாரிகளும் ஆலோசனை செய்து மாணவர்களின் பாதுகாப்பை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் உறுதி இச்சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம். சட்டத்தின் முன் குற்றவாளிகள் நிறுத்தப்படுவார்கள் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.

மாணவர், மாதர் சங்கத்தினர் முற்றுகை

இந்த சம்பவத்தில் குற்ற வாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். மாணவர் களின் பாதுகாப்பை உறுதிப் படுத்த வேண்டும் என்று வலி யுறுத்தி புதனன்று (டிச.25) பல்கலைக்கழகத்தை முற்றுகை யிட்டு இந்திய மாணவர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ரா.பாரதி, “இச்சம்பவம் குறித்து முறையாக தகவலை பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவிக்க மறுக்கிறது. பல்கலைக் கழக வளாகத்தில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் உள்ளன. அரசும், நிர்வாகமும் நடை பெற்ற உண்மையை மறைக் கின்றன” என்றார். மாதர் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் ம.சித்ரகலா கூறுகையில், “பல்கலைக்கழக வளாகத்தில் மாண விகளின் பாதுகாப்பை கல்லூரி நிர்வாகமும், அரசும் உறுதி செய்ய வேண்டும்.  குற்றவாளியை உடனடி யாக கைது செய்ய வேண்டும்” என்றார். இந்த போராட்டத்தில் மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.சரவண செல்வி, பொருளாளர் ஜெ.ஜூலியட், மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ஆனந்த குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து காவல்துறை அதிகாரிகள், பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ், போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து சங்கத் தலைவர்களிடம் எடுக்கப் பட்ட நடவடிக்கைகளை விவரித்த னர். இதனை அடுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப் பட்டது.