tamilnadu

img

நாளை முதல் டாஸ்மாக் ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தம்

நாளை முதல் டாஸ்மாக் ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தம்

சென்னை, பிப்.16 - பிப்.18 முதல் தொடர் வேலை நிறுத்தத்தில்  ஈடுபட உள்ளதாக டாஸ்மாக் நிறுவன தொழிற் சங்கங்களின் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது. டாஸ்மாக் ஊழியர்களை பணி வரன்முறை  செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; ஓய்வு பெறும் வயதை 60 ஆக  உயர்த்த வேண்டும்; இ.எஸ்.ஐ திட்டத்தில் சேர்க்க வேண்டும்; காலி மது பாட்டில்களை  திரும்ப பெறும் திட்டத்தை கைவிட வேண்டும்  என்பன உள் ளிட்ட 12 அம்ச கோ ரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக திங்களன்று  சென்னை யில் ஒருங்கி ணைப்புக் குழு சார்பில் உண்ணாநிலை போராட்டம் நடை பெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் சிஐடியு மாநில பொதுச்செயலாளர் எஸ். கண்ணன் கூறுகையில், 12 நாட்களாக  தொடர் காத்திருப்பு, மறியல் போராட்டம் நடத்தி வரும் தொழிற்சங்கங்கள், தற்போது  கூட்டாக சென்னை உள்ளிட்ட 5 இடங்களில்  உண்ணாநிலை போராட்டம் நடத்துகின்றனர்.  அரசுக்கு வருமானத்தை ஈட்டித் தரும் டாஸ் மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறை வேற்ற மறுப்பது நியாயமற்றது. தொழிலாளர் களின் கோரிக்கைகள் தொடர்பாக அரசு பேசி  தீர்வு காண வேண்டும். பிப்.18 முதல் தொடர்  வேலை நிறுத்த போராட்டத்தை நடத்த உள்ளனர்” என்றார். டாஸ்மாக் மாநில சம்மேளன (சிஐடியு) பொருளாளர் ஜி.சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தை தமிழ்நாடு  அரசு போக்குவரத்து சம்மேளன பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார் தொடங்கி வைத்தார். சிஐடியு அகில இந்திய துணைத்  தலைவர் அ.சவுந்தரராசன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீர பாண்டியன், துணைச் செயலாளர் என்.பெரியசாமி, டாஸ்மாக் மாநில சம்மேளன பொதுச் செயலாளர் கே.திருச்செல்வன் உள்ளிட்ட பலர் பேசினர்.