tamilnadu

img

காமன் வெல்த் ஜூனியர் பளு தூக்கும் போட்டியில் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்று தமிழக வீராங்கனை சாதனை

திருச்சிராப்பள்ளி, அக்.18- தென்னாப்பிரிக்கா சன்சிட்டி நகரில் கடந்த 11.10.2024 அன்று காமன் வெல்த் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த வீராங்கனை ராஜேஸ்வரி இந்தியா சார்பில் ஜூனியர் பளு தூக்கும் 69 கிலோ உடல் எடை பிரிவில் கலந்து கொண்டார். இப்போட்டியில் இவர் 3 தங்கப் பதக்கங்களும், ஒரு வெள்ளிப் பதக்கமும் வென்று சாதனை படைத்தார்.  வீராங்கனை ராஜேஸ்வரி சிஐடியு ஆட்டோ சங்கத்தைச் சேர்ந்த விநாயகமூர்த்தியின் மகள் ஆவார்.  தென்னாப்பிரிக்காவில் இருந்து சொந்த ஊர் திரும்பிய ராஜேஸ்வரிக்கு மணப்பாறையில் மேள தாளங்கள் முழங்க அனைத்துத்தரப்பினரும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருச்சி புறநகர் மாவட்டத் தலைவர் சிதம்பரம், சிஐடியு ஆட்டோ சங்க தலைவர் நவமணி, மணப்பாறை வட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், மணவை பெரியார் சிலை ஆட்டோ சங்க உறுப்பினர்கள், மணவை கட்டுமானச் சங்கத் தலைவர் மணி, செயலாளர்  நித்தியானந்தம் உள்ளிட்டோர் ராஜேஸ்வரிக்கு சால்வை அணிவித்து வாழ்த்திப் பாராட்டினர்.  ராஜேஸ்வரியின் தந்தை விநாயகமூர்த்தி, தாய், சகோதர் மற்றும் உறவினர்கள் உடனிருந்தனர்.