districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

மலை ரயில் மீண்டும் இயக்கம்

மேட்டுப்பாளையம், அக்.18- மண்சரிவால் இரண்டு நாட்களாக தடை பட்டிருந்த உதகை மலை ரயில் போக்குவரத்து வெள்ளியன்று மீண்டும் துவக்கப்பட்டது.  கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் - உதகை இடையே யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற நூற்றாண்டு பழ மையான மலை ரயில் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 15 ம் தேதி இரவு பெய்த மழை கார ணமாக கல்லார் ஹில்குரோ ரயில் நிலையங்களுக்கிடை ஏற்பட்ட மண் சரிவு காரணமாக இதன் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. மலை ரயிலின் இருப்பு பாதை மீது சரிந்து  கிடந்த மண் மற்றும் பாறைகளை அகற்றி தண்டவாளத்தை சீரமைக்கும் பணி நடைப்பெற்றதால் கடந்த 16 மற்றும் 17 ஆம்  தேதிகளில் மேட்டுப்பாளையம் குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. கடந்த இரு நாட்க ளாக நடைபெற்ற மண்சரிவு சீரமைப்பு பணிகள் வியாழ னன்று மாலை நிறைவடைந்த நிலையில், வெள்ளியன்று காலை வழக்கம் போல் நீலகிரி மலை ரயில் சேவை மீண்டும் துவங்கியது. இதனால் ஏற்கனவே முன் பதிவு செய்து காத்தி ருந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் மலை ரயிலில் பயணம் செய்தனர்.

பெலிகான் சிக்னல் அறிமுகம்

கோவை, அக்.18- கோவை - அவிநாசி சாலையில் நான்காவது கட் டமாக பாதசாரிகளுக்கான பெலிகான் சிக்னல் அறி முகம் செய்யப்பட்டது.  சென்னைக்கு அடுத்த படியாக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் கோவை முக்கிய இடத்தை பிடித்துள் ளது. மேம்பாலங்கள், சாலை வசதிகள், உட்கட்டமைப்பு கள் அதிகரித்து வரும் நிலை யில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துகளை குறைக்கும் விதமாக மாநகர காவல் துறை பல்வேறு நட வடிக்கைகளை எடுத்து வரு கின்றனர். அதன் படி மக்கள் கூடும் இடங்களில் ஸ்மார்ட் சிக்னல்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகு தியாக வெள்ளியன்று, அவி நாசி சாலையிலுள்ள கே.எம். சி.எச். மருத்துவமனை அருகே மருத்துவமனை நிர் வாகம் சார்பாக அமைக்கப் பட்ட ஸ்மார்ட் சிக்னலை மாந கர காவல் ஆணையர் பால கிருஷ்ணன் துவக்கி வைத் தார்.

சிபிஎம் ஈரோடு மாவட்டக்குழு அலுவலகத்தை நாளை பிரகாஷ் காரத் திறந்து வைக்கிறார்

ஈரோடு, அக்.18- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக்குழு அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் திறந்து வைக்கி றார். மார்க்சிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக்குழு அலுவலகம் பெருந்துறை சாலையில் மோகன் குமாரமங்க லம் வீதியில் அமைந்துள்ளது. தோழர்.டி.பி.முத்துசாமி  நினைவகமான இக்கட்டடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.  இதனை வரும் 20ஆம் தேதி (நாளை) மாலை 4 மணிக்கு  அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் திறந்து வைக்கிறார். மாவட்டச்செயலாளர் ஆர்.ரகுராமன்  தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில், மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்று தோழர் ஏ.எம்.காதர்  நினைவு கூட்ட அரங்கினைத் திறந்து வைக்கிறார். மத்தி யக்குழு உறுப்பினர் பி.சண்முகம் கல்வெட்டினை திறக்கிறார். இதில்,மாநிலக்குழு உறுப்பினர்  வி.அமிர்தலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதனை தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.