districts

ரயிலில் சிறப்பு சோதனை: ரூ.48.61 லட்சம் அபராதம்

சேலம், அக்.18- சேலம் ரயில்வே கோட் டத்திற்குட்பட்ட ரயில் நிலை யங்களில் நடைபெற்ற சிறப்பு சோதனையில், பய ணச்சீட்டு இல்லாமல் பய ணித்தல் உள்ளிட்ட காரணங் களுக்காக ரூ.48.61 லட்சம்  அபராதம் வசூலிக்கப்பட் டுள்ளது. இதுதொடர்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட நிலை யங்களின் வழியாக இயக்கப் பட்ட ரயில்களில் ரயில்வே  அதிகாரிகள் சோதனை நடத்தி, பயணச்சீட்டு இல்லா மல் பயணிப்பவர்கள், முறை யற்ற வகையில் பயணிப்ப வர்கள், பதிவு செய்யாமல் சரக்குகளை ரயிலில் ஏற்றி செல்பவர்களைக் கண்ட றிந்து அபராதம் விதித்து வரு கின்றனர். அதன்படி, கடந்த அக்.1 முதல் அக்.15 ஆம்  தேதி வரை சிறப்பு சோதனை நடைபெற்றது. 15 நாட்களில் சேலம் ரயில்வே கோட்டத்திற்குட் பட்ட பகுதிகளில் பயணச் சீட்டு இல்லாமல் பயணித்த 4,059 நபர்களிடமிருந்து ரூ.31 லட்சத்து 25 ஆயிரத்து 485 அபராதமாக வசூலிக்கப்பட் டது. முறையற்ற பயணம் மேற்கொண்டதாக 4,287 நபர்களிடமிருந்து ரூ.17 லட் சத்து 14 ஆயிரத்து 300 அப ராதமாக வசூலிக்கப்பட்டது. ரயில்களில் பதிவு செய்யா மல் சரக்குகளை ஏற்றிச் சென் றதாக 44 நபர்களிடமிருந்து ரூ.21 ஆயிரத்து 270 அபரா தமாக வசூலிக்கப்பட்டது. மொத்தம் ரூ.48 லட்சத்து 61  ஆயிரத்து 55 அபராதம் வசூ லிக்கப்பட்டுள்ளதாக, தெரி விக்கப்பட்டுள்ளது.