districts

img

திருப்பூர் அரசு மருத்துவமனை எதிரே சுகாதார சீர்கேடு

திருப்பூர், அக்.18- திருப்பூர் - தாராபுரம் சாலையில் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை எதிரில் கழிவுநீர் கால் வாய் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வரு கிறது.  திருப்பூர் - தாராபுரம் சாலை, பெரிச்சி பாளையம் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. தினமும் பல நூறு பேர் சிகிச் சைக்கு வந்து செல்வதுடன், நூற்றுக் கணக்கானவர்கள் உள்நோயாளிகளா கவும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்ற னர். இந்த மருத்துவமனை எதிரிலேயே அரசு தொழில் பயிற்சி நிறுவனம் செயல் பட்டு வருகிறது. இந்த தொழிற்பயிற்சி நிறுவனத்திற்கு முன்பாக சாலையில் கழிவுநீர் பலநூறு மீட்டர் தூரத்திற்கு செல்கிறது.  மாநகராட்சியின் எல்லைக்குள் வரும்  இந்த பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் மருத்துவமனை சுற்றியுள்ள பகுதியை தூய்மையாக பராமரிப்பதற்கு நடவ டிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் மருத்துவமனை பேருந்து நிறுத்தம் இருக்கும் இந்த இடத்திலேயே நீண்ட காலமாக சுத்தம் செய்யப்படாமல் கழிவுநீர் சாக்கடை தேங்கி உள்ளது. இந்த இடத்திலேயே நோயாளிகள், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பயணிகள் பேருந்துக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. எனி னும் சாலையோரம் கழிவுநீர் வழிந் தோடி செல்வதற்கு தீர்வு காண்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.  இப்பகுதியில் சற்று தொலைவில் உள்ள கழிவுநீர் வடிகால், இணைப்பு தரப்படாமல் இருப்பதால் இந்த நிலை உள்ளது. இப்பிரச்சனையில் மாநக ராட்சி நிர்வாகம் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும். சுகாதாரத்துறை யும் இதைப்பற்றி கண்டு கொள்ளாமல் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் சம் பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தி மக்கள் நோய் தொற்றுக்கு ஆளாகா மல் சுகாதாரம் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை பொதுமக்களிடமிருந்து எழுந்துள்ளது.