districts

img

விஏஓ மீது தாக்குதல்: சிபிஎம் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், அக்.18- கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல் நடத்திய நபரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள  நரவலூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலு வலராக ராமன் என்பவர் பணிபுரிந்து வருகி றார். கடந்த அக்.3 ஆம் தேதின்று திருமுருகன் என்பவர், அரசு மயான புறம்போக்கு நிலத் தில் மரங்களை வெட்டி வேரோடு பிடுங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனை கிராம நிர்வாக அலுவலர் நேரில் சென்று தடுத்த போது, அவரை திருமுருகன் அடித்து கீழே தள்ளி பணி செய்யவிடாமல் தடுத்துள்ளார். இதுசம்பந்தமாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கிராம நிர் வாக அலுவலர் மீது தாக்குதல் நடத்திய திரு முருகன் என்பவரை உடனடியாக கைது செய்ய வேண்டும். வருவாய்த்துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு உரிய பாது காப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழ னன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்செங்கோடு பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் கே.எஸ்.வெங்க டாசலம் தலைமை வகித்தார். மேற்கு ஒன்றி யச் செயலாளர் ஆர்.ரமேஷ், கிழக்கு ஒன்றி யச் செயலாளர் வி.தேவராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் பழனியம்மாள் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். இதில் எலச்சிபாளை யம் ஒன்றியக் கவுன்சிலர் சு.சுரேஷ், வார்டு  உறுப்பினர் ஜோதிமணி, கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சக்திவேல், ஈஸ்வரன், பாலகிருஷ்ணன், ராஜ், பூபதி, முருகன் உட் பட பலர் கலந்து கொண்டனர்.