districts

img

3 ஆவது நீலகிரி புத்தகத் திருவிழா துவங்கியது!

உதகை, அக்.18- 3 ஆவது நீலகிரி புத்தகத் திருவிழா வினை, அரசு தலைமை கொறடா கா. ராமச்சந்திரன் வெள்ளியன்று தொடங்கி வைத்தார். நீலகிரி மாவட்டம், உதகை பழங்குடி யினர் பண்பாட்டு ஆராய்ச்சி மையத் தில், பொது நூலகத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், 3 ஆவது  ‘நீலகிரி புத்தகத் திருவிழா’ வெள்ளி யன்று துவங்கியது. நீலகிரி புத்தகத் திரு விழா 10 நாட்கள் நடைபெற உள்ளது.  இத்திருவிழாவின் துவக்க நிகழ்ச்சியில், அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்தி ரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, புத்தக அரங்குகளை திறந்து  வைத்தார். இதன்பின் கா.ராமச்சந்திரன் பேசுகையில், நமது மாநிலத்தை கல்வி யில் முன்னேறிய மாநிலமாக உரு வாக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், கல்வி மூலமாக பொருளாதாரம் உய ரும் என்ற அடிப்படையில், பல்வேறு  ஆக்கப்பூர்வமான திட்டங்களை முதல் வர் செயல்படுத்தி வருகிறார். குறிப் பாக, இன்றைய இளைஞர்களிடம் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க வேண் டும் என்பதற்காக புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. நேரம் என்பது அனைவருக்கும் ஒன்றுதான். புத்தகங் களை வாசிப்பதற்கென்று நாம் நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும். நான் ஒரு விவசாயி என்பதால் விவசா யம் சார்ந்த புத்தகங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இதுபோன்று ஒவ்வொரு மனி தனுக்கும் ஒரு புத்தகம் விருப்பமான தாக இருக்கும். அவ்வாறு படிப்பதை நடைமுறைக்கு ஏற்றவாறு ஆராய்ந்து செயல்பட வேண்டும். இந்த புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள பல் வேறு புத்தக அரங்கங்கள் மற்றும் அரசுத் துறை அரங்கங்களை பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள், இளைஞர்கள், மாணவர்கள் உட்பட அனைவரும் நல்ல முறையில் பயன்டுத்திக் கொள்ள வேண் டும், என்றார். இவ்விழாவில், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் என்.எஸ்.நிஷா, முதுமலை  புலிகள் காப்பக துணை இயக்குநர் ச.வித்யா, தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழக பொது மேலாளர் அசோக் குமார், மாவட்ட வன அலுவலர்கள் கௌதம்,  வெங்கடேஷ் பிரபு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி, உதகை வருவாய் கோட் டாட்சியர் சதீஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.