tamilnadu

img

இலங்கை கடற்படையினரைக் கண்டித்து மீனவர்கள் போராட்டம்

சென்னை, அக். 18 - இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படு வதையும், தமிழக மீனவர்களை பாது காக்கத் தவறி வரும் ஒன்றிய அரசையும் கண்டித்து வெள்ளியன்று (அக்.18) சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மீனவர் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு இந்த போராட்டத்தை நடத்தியது. இரு நாட்டு மீனவர்களும் சுதந்திர மாக மீன் பிடி தொழில் செய்திட பாக்ஜல சந்தியை பொது மீன்பிடி மண்டலமாக அறிவிக்க வேண்டும், இலங்கை கடற் படையின் தாக்குதலில் மரணம், படுகாயம் அடைந்த மீனவர்களுக்கும், பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி பட குகளுக்கும் இலங்கை அரசிடமிருந்து நிவாரணம் பெற்றுத்தர வேண்டும். சாகர்மாலா, நீலப் பொருளாதார திட்டங்களின் கீழ், கார்ப்பரேட் பெரும் முதலாளிகள் கடல் கனிமவளங்களை எடுப்பது, ஹைட்ரோகார்பன், காற்றா லை திட்டங்களை செயல்படுத்துவது போன்ற மீனவர்களுக்கு எதிரான திட்டங்களை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. போராட்டத்திற்கு தமிழ்நாடு ஏஐடியுசி மீனவ தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.சின்னதம்பி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமா வளவன், தமிழ்நாடு மீன்பிடி தொழிற் சங்க கூட்டமைப்பு (சிஐடியு) பொதுச் செயலாளர் எஸ்.அந்தோணிசாமி, பொருளாளர் எஸ்.ஜெயசங்கரன், துணைத்தலைவர்கள் கே. செல்வானந்தம், ஆர்.லோகநாதன் உள்ளிட்டோர் பேசினர்.