tamilnadu

img

வேட்டையன்: என்கவுண்ட்டரை ஆதரிக்கிறதா?

காவல்துறை சித்ரவதையால் கொல்லப் படும் பழங்குடியின வாலிபரின் கதை யையும், அதற்காக நீதி கேட்டுப் போராடும் பழங்குடியின பெண்ணின் போராட்டத்தையும், அப்பெண்ணிற்கு துணை நின்ற கம்யூனிஸ்ட் இயக்கத்தையும், சட்ட வல்லுநர்களையும் பற்றிய, தமிழகமே கூர்ந்து கவனித்த ஜெய்பீம் படத்தை இயக்கிய இயக்குநர் ஞானவேலின் 2 ஆவது திரைப்படமான வேட்டையன் வெளிவந்து கல வையான விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.  காவல்துறை சித்ரவதை குறித்து படம் எடுத்த  ஞானவேல், வேட்டையன் படத்தில் என்கவுண் டரை நியாயப்படுத்துகிறார் என்றொரு விமர்சனம்  முன் வைக்கப்படுகிறது. இந்த விமர்சனங்கள்  சரியா, தவறா என்று வாதப் பிரதிவாதங்கள்  நடந்து வருகிறது. லைகா எனும் பெரும் திரைப்பட நிறுவனம்  சினிமா சந்தையை வேட்டையன் படத்தின் மூலம் திறம்பட  அபகரித்துக் கொண்டதாகவும் வாதங்கள் எழுந்துள்ளன. வேட்டையன் திரைப்படத்தை இந்த அளவுகோல்களோடு மட்டும் சுருக்கி விட முடியுமா என்ற கேள்விகளும் எழுகின்றன. 

பாராட்டுக்குரியவர்

வேட்டையன் திரைப்படத்தின் மையக் கதை நீட் நுழைவுத் தேர்வு குறித்தும், வியாபாரமாகி வரும் கல்வி குறித்தும், நுழை வுத் தேர்வுச் சந்தை ஒன்று உருவாகி வளர்ந்து வருவது பற்றியுமா னது. அத்தோடு என்கவுண்ட்டர் தவறான செயல் என்பதையும் உள்ளடக்கிய கதை அம்சம் கொண்டது. என்கவுண்ட்டர் குறித்து பொது சமூகத்தில் இருக்கும் கருத்தை விவாதப் பொருளாக்கி, அதில் உள்ள தவறுகளை சுட்டி, என்கவுண்ட்டர்களை சட்ட  விரோதம் என நிறுவுகிறது. இந்த இரண்டு கருப் பொருளையும் மையமாகக் கொண்டு ஒரு திரைப்படத்தை உருவாக்கிய ஞான வேல் பாராட்டுக்குரியவர் என்பதில் சந்தேகமில்லை.

கதை என்ன?

சமூக விரோதிகளை சுட்டுக் கொல்வதையே வாடிக்கையாக கொண்ட எஸ்.பி ஆதியன் குமரி மாவட்ட எஸ்.பியாக பொறுப் பேற்ற பின் பல சமூக விரோதிகளை சுட்டுக் கொல்கிறார். அரசுப் பள்ளியை கஞ்சா வியாபாரிகள் பயன்படுத்துவது குறித்து பள்ளி  ஆசிரியை எஸ்.பிக்கு கடிதம் எழுதுகிறார். அடுத்த காட்சியில் கஞ்சா வியாபாரியை எஸ்.பி சுட்டுத் தள்ளுகிறார். துணிச்சலான ஆசிரியை சரண்யா, சென்னைக்கு மாற்றலாகி அரசுப் பள்ளி யில் பணியாற்றுகிறார். ஏழை மாணவர்களை ஏமாற்றி, தனி யார் கோச்சிங் சென்டர் மூலம், பல கோடி சம்பாதிக்கும், அரசியல்  செல்வாக்கு மிகுந்த முதலாளியை எதிர்க்கிறார். அதனால் அவர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். கோச்சிங்  சென்டர் முதலாளியின் தலையீட்டின் பேரில், சரண்யா கொலை  வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி, சரண்யாவின் நண்ப ரான, மிகவும் ஏழைக் குடும்பத்தைச் சார்ந்த என்ஜீனியர் குணாவை குற்றவாளியாக்குகிறார். சரண்யா கொலைக்கு நீதி  கேட்டு மக்கள் போராட்டங்கள் வலுக்கும் நிலையில், அரசியல்  நிர்பந்தங்கள் காரணமாக குணாவை என்கவுண்ட்டர் செய்ய  ஆதியன் சென்னை வருகிறார். குணாவை சுட்டுத் தள்ளுகிறார்.  துவக்கத்தில் இருந்து என்கவுண்ட்டர்களை எதிர்த்து வரும் ஓய்வு பெற்ற நீதிபதி அமிதாப்பச்சன் மூலம், சரண்யாவை  கொலை செய்த உண்மைக் குற்றவாளியை அடையாளம் காண் கிறார் ஆதியன். கோச்சிங் சென்டர் முதலாளிக்கு எதிராக  ஆதாரங்களைத் திரட்டி, வழக்கு தொடுத்து, அவனுக்கு ஆயுள்  தண்டனை பெற்றுத் தருகிறார். இந்திய காவல்  பணிக்கு தேர்வானவர்களுக்கான பயிற்சி மையத் தில் என்கவுண்ட்டர் தவறு எனப் பேசுகிறார். இடையில் குணாவை சுட்டுக் கொன்றது தவறு  என்றும், அதற்காக தன்னை மன்னிக்கும்படி யும் வேண்டுகோள் வைக்கிறார். குணா ஏழை என் பதால் என்கவுண்ட்டர் செய்யப்படுகிறார் என்றும்,  என்கவுண்ட்டர் செய்யப்படுகிறவர்கள் மிக பின் தங்கியவர்கள் தான் என்றும் விளக்கம் அளிக் கிறார். செம்மரம் வெட்டச்சென்ற தொழிலாளிகள் தான் கொல்லப்பட்டார்களே தவிர, அதன்  பின்னால் இருந்த ஏஜெண்டுகளும், வியாபாரி களும், அரசியல்வாதிகளும் கண்டு கொள்ளப்பட வில்லை என்றும் ஆதங்கம் முன் வைக்கப்படு கிறது. நுழைவுத் தேர்வு மையங்கள் மற்றும் என்கவுண்ட்டர் இரண்டும் விவாதப் பொருளாக முன் வைக்கப்படுகிறது.     

நீட் பயங்கரம்

பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பின் மாநில உரிமைகள் பறிக்கப்படுவதும், அதிகாரங்கள் திணிக்கப்படுவதையும் பார்த்து வருகிறோம். அப்படி திணிக்கப்பட்ட ஒன்று தான் நீட்.  தனியார் கல்வி முதலீட்டாளர்களின் லாபவெறிக்கு தயாரிக்கப் பட்ட விருந்து தான் நுழைவுத் தேர்வுகள். நுழைவுத் தேர்வு களுக்கு மாணவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் பல லட்சங்களை  கோச்சிங் சென்டர் நிறுவனங்கள் வசூலிக்கின்றன. இந்தியா வில் இந்த கோச்சிங் சென்டர் சந்தையின் தற்போதைய மதிப்பு  58 ஆயிரம் கோடி ரூபாய். இது அடுத்த 5 ஆண்டுகளில் 1330  ஆயிரம் கோடி ரூபாய்களாக இருக்கும் என்று மதிப்பிடு கிறார்கள். தமிழகத்தில் கடந்த எட்டு ஆண்டுகளில் நீட் தேர்வு காரணமாக 30க்கும் அதிகமான மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பயிற்சி மையங்களின் தலைநகராக விளங்கும் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரத்தில், மன அழுத்தம் காரணமாக 2016ல் 17 மாணவர்களும், 2018ல் 18  மாணவர்களும், 2022ல் 15 மாணவர்களும், 2023ல் 15 மாண வர்களும் தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து நாடா ளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது கல்வித்துறை இணை அமைச்சர் விபரங்கள் இல்லை என்று மெத்தனமாக பதில் அளித்தார்.  படிக்கவே தகுதி வேண்டும் என்று சொல்லுவது, சமத்துவ  சிந்தனைக்கு எதிரானது. இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு  விரோதமானது. அரசியல் சாசனம் வழங்கியுள்ள வாழ்வதற்கான  உரிமை என்பது, விரும்பிய கல்வியை பெறவும் தான். நுழைவுத்  தேர்வு தகுதியை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது அடிப்படை இல்லாத, குறைபட்ட சிந்தனையின் வெளிப்பாடு. இதனை வேட்டையன் பளிச்சென சொல்லுகிறது. என்கவுண்ட்டருக்கு எதி ராகவும் பேசுகிறது. மக்களுக்கு தேவை விரைவான நீதி அல்ல,  நிறைவான நீதி என்கிறார் ஓய்வு பெற்ற நீதிபதி. மற்றபடி ரஜினிகாந்தின் ஹீரோயிசம், நூறு பேரை அடித்து  நொறுக்குவது எல்லாம் எம்ஜிஆர் படத்து பார்முலா தான்.  மூலதனம் நூலையே நல்ல லாபம் கிடைக்கும் என்று தான்  அச்சிட்டு வெளியிட்டனர் என்பதே வரலாறு. லாபம் கிடைக்குமானால் மூலதனம் எதையும் செய்யும். எதையும் வியாபாரமாக்கும். - கே.ஜி.பாஸ்கரன்