தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வுபெற்ற மருந்தாளுநர் சங்க மாவட்ட அமைப்புக்கூட்டம்
கரூர், டிச.12- தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வு பெற்ற மருந்தாளுநர் சங்க கரூர் மாவட்ட அமைப்புக்கூட்டம், சங்க அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, என். பாலகுமாரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க மாநிலப் பொருளாளர் டி. முருகன் கூட்டத்தை துவக்கி வைத்துப் பேசினார். அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் சாமுவேல் சுந்தரபாண்டியன், மாவட்டச் செயலாளர் கெ. சக்திவேல், முன்னாள் மாநிலத் தலைவர் எம். சுப்பிரமணியன் ஆகியோர் பேசினர். மாநில பொதுச் செயலாளர் அ. விஸ்வேஸ்வரன் சிறப்புரையாற்றினார். மருந்தாளுநர் சங்க மாவட்டச் செயலாளர் இளங்கோ, ஏ. மோகன், ஆர். சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட தலைவராக அ.மோகன், செயலாளராக என்.பாலகுமாரன், பொருளாளராக ஆர். சுரேஷ், துணைத் தலைவராக ஆர். ஹோஸ்மின், இணைச் செயலாளராக எம். ஜெயபாலன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, குளித்தலை அரசு தலைமை மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கரூரில் இருந்து பகல் நேரத்தில் சென்னைக்கு ரயில் இயக்க வேண்டு என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
