அத்திக்கடவு அவினாசி திட்ட செயல்பாடு பற்றி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆய்வு
திருப்பூர், அக். 29 - ஈரோடு மாவட்டம், பெருந்துறை, சீனாபுரம் அருகில் உள்ள போலநா யக்கன்பாளையம் அத்திக்கடவு அவி னாசி திட்ட நீரேற்று நிலையம் எண். 4-க்கு புதனன்று தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தினர் சென்று நீரேற்றம் சம் பந்தமாகவும், குளம் குட்டைகளுக்கு நீர் நிரப்பும் பணிகள் குறித்தும், நீர் நிரப்பாத பகுதிகளுக்கு நீர் நிரப்ப எடுத்த நடவடிக்கை குறித்தும் விசா ரித்தனர். அங்கிருந்த நீர்வள ஆதாரத் துறை உதவி பொறியாளர் கார்த்திகே யன் இது பற்றி விளக்கமாக எடுத்து ரைத்தார். அதில் 4-ம் எண் நீரேற்று நிலையத் தின் மூலமாக திட்டத்துக்கு உட்பட்ட பெரும்பாலான குளம், குட்டைகள் நிரப்பப்பட்டு விட்டதாகவும், இதே போல நீரேற்று நிலையம் எண். 5 & 6-க்கு உட்பட்ட நீர் ஏற்றாத குட்டை, குளங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நீரேற்றி வருவதாகவும் தெரிவித்தார். பெரிய குளங்களுக்கு நீர் நிரப்ப பிரச்சினை ஏதும் வருவதில்லை, 2 அங்குலம் மற்றும் 3 அங்குலம் போன்ற சிறிய அளவிலான குழாய் பதித்து கொண்டு செல்லும் பகுதியில் ஆற்றில் இருந்து நீரேற்றும்போது வரும் கற்கள் உள்ளிட்ட திடப்பொ ருள்கள் குழாயை அடைத்துக் கொள் வதால் தண்ணீர் விநியோகம் பாதிக் கப்படுகிறது. அத்துடன் ஓ.எம்.எஸ். கருவி என்று சொல்லக்கூடிய ஜிபி ஆர்எஸ் உடன் இயங்கக்கூடிய நீர் அளவு மானியும் (மீட்டரும்) பழுத டைந்து விடுகிறது. இதனால் சிறிய குட்டைகளுக்கு நீர் நிரப்புவதில் பிரச்சனை உள்ளதா கவும், அந்த இடங்களில் பராமரிப்பு பொறுப்பில் உள்ள எல்&டி நிறுவ னம் மூலமாக உடனடியாக பராம ரிப்பு செய்து நீரேற்றி வருவதாகவும் தெரிவித்தார். ஆண்டுக்கு 70 நாட் கள் 1.5 டிஎம்சி நீரேற்றம் என்பது தான் திட்டத்தின் ஏற்பாடு, அதை நோக்கி இந்த ஆண்டு சென்று கொண் டுள்ளது என்றும் தெரிவித்தார். கிராம பஞ்சாயத்து அளவில் விவ சாயிகள், ஆர்வலர்கள் கமிட்டி அமைத்து குளம் குட்டைகளில் நிறு வப்பட்டுள்ள கருவிகளை பாது காக்க வேண்டும் என்று விவசாயி கள் சங்கம் சார்பில் தெரிவித்த யோச னையை ஏற்றுக்கொண்டார். பின்பு நீரேற்றும் எந்திரங்கள் செயல்பாடு குறித்தும் நேரில் விளக்கம் அளித் தார்கள். உதவி பொறியாளர் சிறப் பான ஒத்துழைப்பு கொடுத்தற்கு விவ சாயிகள் சங்கத்தினர் பாராட்டும், நன் றியும் தெரிவித்தனர். இந்த நிகழ்வில் தமிழ்நாடு விவசா யிகள் சங்க திருப்பூர் மாவட்டச் செய லாளர் ஆர்.குமார், மாவட்ட துணை தலைவர் எஸ்.கே.கொளந்தசாமி, பெருந்துறை தாலுகா தலைவர் கே. குப்புசாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் ஊத்துக்குளி தாலுகா செயலாளர் கு. சரஸ்வதி, குன்னத்தூர் நகர கிளைச் செயலாளர் பி.சின்னசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
