வக்பு திருத்தச் சட்டப் பிரிவுகள் நிறுத்திவைப்பு
‘வக்பு வாரியங்களில் புதிய நியமனம், சொத்துக்கள் மீது நடவடிக்கை கூடாது’
உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு
வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனுக் கள் மீது, ஒன்றிய அரசு 7 நாட்களுக்குள் பதில ளிக்குமாறு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு உத் தரவிட்டுள்ளது. “அதுவரை, வக்பு திருத்தச் சட்டத்தின் பிரிவு 9 மற்றும் 14-இன் கீழ் மத்திய வக்பு கவுன்சில் அல்லது மாநில வக்பு வாரியங்களில் எந்த நிய மனங்களையும் செய்யக் கூடாது”, அதேபோல, “ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட அல்லது வக்பு என அறிவிப்பு செய்யப்பட்ட வக்பு சொத் துக்கள் மீது, மாவட்ட ஆட்சியர் எந்த முடி வும் எடுக்கக் கூடாது” என்றும் உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
73 மனுக்கள்
வக்பு (திருத்த மற்றும் ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாடு) சட்டம் கடந்த ஏப்ரல் 8 அன்று அம லுக்கு வந்தது. இந்தச் சட்டத்தை எதிர்த்து, இந்தியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சி கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் முகமது சலீம் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் மொத் தம் 73 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார் மற் றும் கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு, புத னன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறி ஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, ராஜீவ் தவான், சி.யு. சிங் உள்ளிட்டோர் ஆஜ ராயினர். ஒன்றிய அரசுத் தரப்பில் சொலி சிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரா னார். மனுதாரர்கள் தரப்பை வழிநடத்திய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், பயன்பாட்டு அடிப் படையிலான வக்பு சொத்துக்களை, வக்பாக ஏற்க முடியாது என்பதும், மத்திய வக்பு கவுன்சில் மற்றும் மாநில வக்பு வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களைச் சேர்ப்ப தும் அரசியலமைப்பிற்கு முரணானவை என்று வாதிட்டார். “தில்லியில் உள்ள ஜூம்மா மசூதி போன்ற பெரும்பாலான வக்பு சொத்துக்கள், பயன் பாட்டு அடிப்படையில் வக்பு செய்யப்படு கின்றன; இப்போது திடீரென ஜூம்மா மசூ திக்கான பத்திரத்தைக் கொடுக்குமாறு கட்டா யப்படுத்தினால் அதனை வழங்குவது சாத்திய மில்லை” என்பதை சுட்டிக்காட்டிய கபில் சிபல், இவ்வாறு, “300 ஆண்டுகளுக்கு முன்பு வக்பு உருவாக்கப்பட்டதா என்று கேட்டு, அதற்கான பத்திரத்தை சமர்ப்பிக்குமாறு கூறினால், அதற் கான எந்த ஆவணங்களும் இருக்காது. ஏனெ னில், இதுபோன்ற சொத்துக்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டவை” என்பதைச் சுட்டிக்காட்டினார்.
நீதிபதிகளின் கேள்விக் கணைகள்
இந்த வாதங்களைக் கேட்டுக் கொண்ட நீதிபதிகள், ஒன்றிய அரசுக்கு பல்வேறு கேள்வி களை எழுப்பினர். “ஆங்கிலேயர்கள் வரும் வரை சொத்துக் களை பதிவு செய்யும் நடைமுறை இல்லை. எனவே, 14, 17-ஆம் நூற்றாண்டுகளில் கூட சொத்துக்கள் வக்புக்கு தானமாக அளிக்கப் பட்டிருக்கும். அப்படியிருக்க, வக்பு சொத்து எது என்பதை, ஆவணங்களின் அடிப்படை யில் ஆட்சியர்கள் முடிவு செய்வது நியா யமா? ஒரு சொத்து அரசாங்கச் சொத்தா இல் லையா என்பது குறித்த தகராறில் அரசாங் கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி விசார ணையை முடிக்கும் வரை, அது வக்பு சொத்தா கக் கருதப்படாது என்று சொல்வது நியா யமா? சொத்துக்களை வக்பு என்று அறிவிக்கும் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை பிரிவு 2A ஷரத்து எவ்வாறு மீற முடியும்? இந்து அறநிலையத் துறை சட்டப்படி இந்து கள் மட்டுமே அதன் நிர்வாகிகளாக நியமிக் கப்படுகிறார்கள். இந்நிலையில், வக்பு சட்டத் தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை பின்பற்றப் படுகிறது? திருப்பதி தேவஸ்தானம், தேவசம்போர்டு உள்ளிட்ட அமைப்பில் இந்துக்கள் அல்லா தோர் உள்ளனரா? அல்லது இனிமேல் இந்து அறக்கட்டளை வாரியங்களில் இஸ்லாமியர் களை உறுப்பினர்களாக அனுமதிப்பீர்களா?” என்று கேள்விகளை முன்வைத்தனர். இதனடிப்படையில், வக்பு திருத்தச் சட்டத் தில் இடம்பெற்றுள்ள சில பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதிப்போம் என்றும் நீதிபதி கள் தெரிவித்தனர். ஆனால், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கால அவகாசம் கோரியதன் அடிப்ப டையில், விசாரணையை வியாழக்கிழமை பிற் பகல் 2 மணிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தி ருந்தனர்.
அரசுத்தரப்பு வாதம்
அதன்படி, வியாழனன்று விசாரணை துவங்கியதும், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “ஒரு சட்டத்தை நேரடியாகவோ அல் லது மறைமுகமாகவோ நிறுத்தி வைப்பது ஒரு கடுமையான நடவடிக்கையாக இருக்கும்,” என்றும், “விதிகளை வெறுமனே படித்துப் பார்ப்பதன் அடிப்படையில் மட்டுமே தடை விதித்துவிட முடியாது” என்றும் கூறின. மேலும், “லட்சக்கணக்கில் வந்த கோரிக்கை களின் அடிப்படையிலேயே வக்பு திருத்தச் சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்துள் ளது. முழு கிராமங்களே கூட வக்புகளாக அறி விக்கப்பட்டு உள்ளன. தனியார் சொத்துக்கள் வக்புகளாக எடுத்துக்கொள்ளப்பட்டன. இது ஏராளமான அப்பாவி மக்களை பாதிக்கிறது,” என்றும் கூறினார். அப்போது, “சட்டத்தில் சில நேர்மறை யான விஷயங்கள் இருப்பதை நாங்களும் ஒப்புக்கொள்கிறோம்; அதேபோல சட்டத்தை நிறுத்திவைக்கக் கூடாது என்று சொல்வதும் சரி தான்” என்ற நீதிபதிகள், “எல்லா நேரத்தி லும் சட்டங்களை நீதிமன்றங்கள் நிறுத்தி வைப்பதில்லை” என்றனர். “ஆனால், சட்டத்திற்கு எதிரான வழக்கு கள் நீதிமன்றத்தில் இருக்கும் போது, அதே சட்டத்தின் நடைமுறைகளால் ஏற்கெனவே இருக்கும் நிலைமைகள் மாறக்கூடாது; மக்க ளின் உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது” என்ப தையும் நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம் என்ற னர். இதையடுத்து, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த வழக்கில் பதிலளிக்க மேலும் கால அவகாசம் வேண்டும் என்றார்.
இடைக்கால உத்தரவு
அதற்கு, “முஸ்லிம் அல்லாத உறுப்பினர் கள் வக்பு வாரியங்கள் மற்றும் மத்திய வக்பு கவுன்சிலுக்கு பரிந்துரைக்கப்பட மாட்டார் கள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட வக்புகள் மாற்றப்பட மாட்டாது” என்ற நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டால், கால அவகாசம் வழங்கத் தயார்” என தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தெரி வித்தார். “வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்குகள் மீது, ஒன்றிய அரசு 7 நாட்களுக் குள் பதிலளிக்கும். அதுவரை, வக்பு திருத்தச் சட்டத்தின் பிரிவு 9 மற்றும் 14 இன் கீழ் கவுன் சில் மற்றும் வாரியத்திற்கு எந்த நியமனங்க ளும் செய்யப்படாது” என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உறுதியளித்தார்.அதேபோல, “ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட அல்லது வக்பு என அறிவிப்பு செய்யப்பட்ட வக்பு சொத்துக்கள் மீது, மாவட்ட ஆட்சியர் எந்த முடிவும் எடுக்க மாட்டார்” என்றும் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், சொலி சிட்டர் ஜெனரலின் உறுதிமொழியையே இடைக்கால உத்தர வாக பிறப்பித்தது. அதாவது, “நீதிமன்றத்தால் வக்பு என்று அறிவிக்கப் பட்ட அனைத்து சொத்துக்களும், அவை பயனரால் வக்பு செய்யப்பட்டதாக இருந்தாலும் சரி அல்லது 1995 சட்டத்தின் கீழ் ஆவணங்கள் மூலம் வக்பு செய்யப்பட்டதாக இருந்தாலும் சரி, இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் வரை, அவை ரத்து செய்யப்படாது. வழக்கு முடியும் வரை திருத்தப்பட்ட புதிய சட்டத் தின்படி மத்திய வக்பு கவுன்சில்கள் மற்றும் மாநில வக்பு வாரியங்களில் முஸ்லிம் அல்லாதவர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள். மாநில வாரியங்களில் நியமிக்கப்பட்டால் அது செல்லாததாக கருதப்படும். வக்பு சொத்துக்களின் நிலை யை ஆட்சியர் தீர்மானிக்கும் விதியும் அமலுக்கு வராது” என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.
மே.5க்கு ஒத்தி வைப்பு
மேலும், வழக்கை மே 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அன்றைய தினம், வக்பு திருத்தச் சட்டத்தின் அரசியலமைப்பு செல்லுபடித்தன்மை குறித்த மனுதா ரர்களின் கேள்விகளுக்கு ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும்; அடுத்த விசாரணையின் போது, 5 மனுதாரர் கள் மட்டுமே இருக்க வேண்டும். அந்த 5 பேரை மனு தாரர்களே முடிவு செய்துகொள்ள வேண்டும். மற்றவர்க ளின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டவையாக கருதப் படும் என்றும் தெரிவித்தனர்.