சன் நியூஸ் முதன்மை ஆசிரியர் குணசேகரன்
பிரதமர் மோடியை விமர்சிக்கும் கேலிச் சித்திரம், இந்திய நாட்டையோ இறையாண் மையையோ கேலிக்கு உள்ளாக்கும் சித்திரம் அல்ல. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை மிகத் தவறான முன்னுதாரணம். நீதிமன்றத் தில் இந்த நடவடிக்கை நிச்சயம் கேலிக்கு உள் ளாகும். கருத்துச் சுதந்திரம் நிலைநாட்டப்படும்.
ஊடகவியலாளர் ரானா அயூப்
கடந்த இரு மாதங்களாக பிரதமரும், பாஜகவினரும் கும்பமேளா நடத்திய தற்காக தங்களைத் தாங்களே புகழ்ந்து கொண்டிருக்கின்றனர். நெரிசலாலும் நிர்வாகச் சீர்கேடாலும் உயிரிழந்தவர்க ளை பற்றி கேள்வி கேட்டால் மட்டும், பதிலளிக்க யாரும் இல்லை.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்
நள்ளிரவில் அவசர அவசரமாக புதிய தேர்தல் ஆணையரை ஒன்றிய அரசு நியமித்திருக்கிறது. தலைமை தேர்தல் ஆணையர் தேர்வு, நடுநிலையாக இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் பலமுறை கூறியிருக்கிறது. உச்சநீதிமன்ற உத்தரவு வருவதற்கு முன் நியமிக்கத்தான் இத்தனை அவசரமும். ஒன்றிய பாஜக அரசு, தேர்தல் முறைகளை தன் விருப்பத்துக்கு வளைப்பதைத்தான் இத்தகைய செயல்பாடுகள் காட்டுகின்றன.

மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.இராதாகிருஷ்ணன்
பாஜகவை சேர்ந்தவர்கள் எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் செய்யலாம். அதற்கெல்லாம் சட்டமே கிடையாது. மணிப்பூரில் பைரேன் சிங் ஒரு இன அழிப்பையே நடத்தி முடித்திருக்கிறார். ஆனால் பாஜகவுக்கு ஆதரவாக இல்லையென்றால் விகடன் முடக்கம் போன்ற அடக்குமுறைதான் என்ற சூழல் உள்ளது.