ஒன்றிய அரசு நடத்தக்கூடிய நேரு யுவ கேந்திரா மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகளில் தமிழ் மொழி நீக்கப்பட்டதற்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"ஒன்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் நடத்தக்கூடிய நேரு யுவ கேந்திரா மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகளில் கடந்த ஆண்டு வரை தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகள் அனுமதிக்கப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு தமிழ் நீக்கப்பட்டு இந்தி, ஆங்கிலம் மட்டுமே இடம்பெற்றுள்ளன.
இதனை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ் உடனடியாக இணைக்கப்பட வேண்டும்."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.