ஊடுருவல் காரணமாக முஸ்லிம் மக்கள் தொகை அதிகரிப்பாம் அமித் ஷாவின் அடாவடிக்கு வலுக்கும் கண்டனம்
இந்தியாவில் முஸ்லிம் மக்கள் தொகை அதிகரிப்புக்கு ‘ஊடுரு வல்’ தான் காரணம் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். தில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அமித் ஷா மேலும் பேசுகையில், “அதிக கருவுறுதல் விகிதங்கள் காரணமாக அல்ல, மாறாக பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத் தில் இருந்து ஊடுருவல் காரணமாக முஸ்லிம் மக்கள் தொகை அதிகரித்துள் ளது” என அடாவடியாக பேசினார். மோடி மற்றும் அமித் ஷா தலைமை யிலான பாஜக அரசு கடந்த 11 ஆண்டு களாக மத்தியில் ஆட்சியில் உள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சராக, அமித் ஷா எல்லைப் பாதுகாப்புப் படையின் நேரடிப் பொறுப்பிலும் உள்ளார். பாஜக ஆட்சியின் பல ஆண்டுகளுக்குப் பிறகும், நாட்டிற்குள் பெரிய அளவிலான ஊடு ருவல் இருப்பதாக அமித் ஷா கூறுகிறார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் அமித் ஷாவின் வெறுப் புப் பேச்சுக்கு கண்டனம் குவிந்து வரு கிறது. இதற்கிடையில், தேர்தல் ஆணை யத்தின் வாக்காளர் பட்டியல் கடுமையான திருத்தத்தையும் அமித் ஷா நியாயப் படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.